ராகுல் பிரதமராக பாகிஸ்தான் ஆதரவு
Dinamani Chennai|May 03, 2024
பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ராகுல் பிரதமராக பாகிஸ்தான் ஆதரவு

'இந்தியாவில் பலவீனமான அரசு அமைவதே பாகிஸ்தானின் விருப்பம். அதற்காக ராகுல் காந்தி அடுத்த பிரதமராக அந்த நாடு ஆதரவு தெரிவிக்கிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

பாகிஸ்தானின் 'சீடர்' காங்கிரஸ் என்றும் அவர் விமர்சித்தார்.

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சௌதரி ஃபவாத் ஹுசைன், தனது சமூக ஊடகபக்கத்தில் புதன்கிழமை ராகுல் காந்தியின் விடியோ ஒன்றை பகிர்ந்து, அவரை புகழ்ந்து பதிவிட்டார். இந்தச் சூழலில், மேற் கண்ட குற்றச்சாட்டை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார்.

மக்களவைத்தேர்தலையொட்டி, குஜராத்தின் ஆனந்த் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: இந்தியாவில் காங்கிரஸ் கட்சி அழிந்து வருவதால், பாகிஸ்தான் அழுது கொண்டிருக்கிறது. அக்கட்சிக்காக, பாகிஸ்தான் தலைவர்கள் இப்போது பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்.

முழுமையாக காங்கிரஸின் 'இளவரசர்’ (ராகுல்) இந்திய பிரதமராக வேண்டுமென்பதே பாகிஸ்தானின் விருப்பம். காங்கிரஸ் கட்சி அந்நாட்டின் 'சீடர்' என்பதால், இதில் வியக்க எதுவுமில்லை.

பாகிஸ்தானுக்கும் காங்கிரஸுக்கும் உள்ள தொடர்பு, இப்போது அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் பலவீனமான அரசு அமைய வேண்டுமென நமது எதிரிகள் விரும்புகின்றனர்.

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டில் மிகப்பெரிய பயங்கர வாதத் தாக்குதல் நடந்தபோது, நாட்டில் பலவீனமான அரசுதான் இருந்தது. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்ததைப் போல் ஊழல் வேண்டுமென்பதும் அரசு அமைய அவர்களின் விருப்பம்.

ஆனால், மோடியின் அரசு வலுவானது; யாருக்கும் அடிபணியாதது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைப் போல் இல்லாமல், இப்போது பாகிஸ்தானின் பயங்கரவாத 'பயணம் ஒடுக்கப்பட்டுள்ளது.

முன்பு பயங்கரவாதத்தை ஏற்று மதி செய்த அந்த நாடு, இப்போது கோதுமை இறக்குமதி செய்யவே போராடுகிறது.

அதேநேரம், உலகின் நம்பிக்கை ஒளி இந்தியா என்று சர்வதேச சமூகத்தினர் கூறுகின்றனர். ஒட்டு மொத்த உலகின் நண்பனாக இந்தியா பார்க்கப்படுகிறது என்றார் பிரதமர் மோடி.

This story is from the May 03, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the May 03, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

ஸ்வாதி மாலிவால் மீதான தாக்குதல் வழக்கு: பிபவ் குமாருக்கு 5 நாள் போலீஸ் காவல்

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்தது.

time-read
1 min  |
May 20, 2024
பாஜக தலைமையகத்தை நோக்கி பேரணி: கேஜரிவால் தடுத்து நிறுத்தம்
Dinamani Chennai

பாஜக தலைமையகத்தை நோக்கி பேரணி: கேஜரிவால் தடுத்து நிறுத்தம்

தில்லியில் பாஜக தலைமையகத்தை நோக்கி ஆம் ஆத்மி கட்சியினருடன் பேரணியாகச் செல்ல முயன்ற கட்சியின் தேசிய அமைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

time-read
1 min  |
May 20, 2024
வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து - ஈரான் அதிபரின் நிலை என்ன?
Dinamani Chennai

வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து - ஈரான் அதிபரின் நிலை என்ன?

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி பயணம் செய்த ஹெலி காப்டர் மோசமான வானிலை காரணமாக வனப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
May 20, 2024
Dinamani Chennai

தமிழகத்தில் குறையும் வெப்பம்!

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல இடங்களில் மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது.

time-read
1 min  |
May 20, 2024
Dinamani Chennai

4 மாவட்டங்களுக்கு நாளை வரை சிவப்பு எச்சரிக்கை

தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (மே 20,21) அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 20, 2024
நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
Dinamani Chennai

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

நேபாள பிரதமா் பிரசண்டா தலைமையிலான அரசு மீது திங்கள்கிழமை (மே 20) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

time-read
1 min  |
May 20, 2024
இந்தியாவுடன் வர்த்தக உறவு பாதிப்பு ஏன்?
Dinamani Chennai

இந்தியாவுடன் வர்த்தக உறவு பாதிப்பு ஏன்?

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதால் அந்நாட்டுடன் வா்த்தக உறவு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இசாக் தாா் நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் விளக்கமளித்துள்ளாா்.

time-read
1 min  |
May 20, 2024
பஞ்சாபை வீழ்த்தியது ஹைதராபாத்
Dinamani Chennai

பஞ்சாபை வீழ்த்தியது ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியின் 69-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

time-read
1 min  |
May 20, 2024
Dinamani Chennai

அரசியல் கட்சிகளை ஆதரித்து வாக்கு சேகரிக்க மாட்டோம்

மம்தா குற்றச்சாட்டுக்கு துறவிகள் பதில்

time-read
1 min  |
May 20, 2024
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் களம்: நீதி கோரி வாக்கு கோரும் பண்டிட் வேட்பாளர்
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் களம்: நீதி கோரி வாக்கு கோரும் பண்டிட் வேட்பாளர்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்-ரஜௌரி மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒரே வேட்பாளரான திலீப்குமார் பண்டிதா (56) தங்கள் சமூகத்துக்கு நீதி கோரி வாக்கு சேகரித்து வருகிறார்.

time-read
1 min  |
May 20, 2024