எதிர்வினையாற்றும் ஆளுமை!
Dinamani Chennai|April 11, 2024
மனிதர்களின் ஆளுமையை உளவியலறிஞர்கள் பல வகைகளாகப் பகுத்துக் காட்டியுள்ளனர்.
எதிர்வினையாற்றும் ஆளுமை!

ஜான்சன் டர்பி என்னும் உளவியலறிஞர், வெளிப்படைத் தன்மை மிக்கோர், மனச்சான்றினை மதிப்போர், நட்புறவு கொள்வோர், ஒத்திசைவு கொள்வோர், நரம்பியல் பாதிப்புள்ளோர் என்றவாறு பலவகையான ஆளுமைப் பண்புடைய மனிதர்களை இனங்காட்டுகின்றார்.

இங்குக் குறிப்பிடப்படாத வேறு சில வகை ஆளுமையாளர்களும் உளர். அத்தகையவர்களுள் குறிப்பிடத்தக்க ஒரு வகையினர் எதிர்வினையாற்றும் ஆளுமையாளர் ஆவர். எதிர்வினை என்றவுடன் எதிர்மறைச் செயல் (நெகட்டிவ் ஆக்ஷன்) என்ற பொருளை நினைவுகூர்ந்து, இணைத்து இடர்ப்படத் தேவையில்லை.

எதிர்வினை (ரீஆக்டிவ்) என்பது, ஒரு நிகழ்ச்சியைக் கண்ணெதிரே கண்டவுடன் "நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கிப் போகாமல், அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மேலதிகமாகச் செயல்படும் மனிதர்களைப் பற்றியதாகும்.

உளவியலறிஞர்கள் எதிர்வினையாற்றும் ஆளுமையினரின் பண்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டுகின்றனர்: மிக விரைவாகவும் மரபுகளைத் தேவையான அளவு வளைத்தும், செயல்படக் கூடியவர்கள். இவர்கள் ஒரு பணியைச் செய்வதில் பின்பற்றப்பட விதிமுறைகளை மட்டுமே பற்றிக் கொண்டிராமல் விட்டுக் கொடுத்தும் போவார்கள். இவர்களுக்கு ஒரு செயலின் இறுதி விளைவே முக்கியம். ஒரு சிக்கலை அதன் வேருடன் களைபவர்களாக இவர்கள் இருப்பார்கள்; சிக்கலின் அறிகுறிகளை மட்டும் களைபவரல்லர்.

துன்பங்கள் ஏற்படும் போது விரைந்து செயல்பட்டு உதவுவர். கடினமான அழுத்தங்களுக்கு இடையிலும் இவர்கள் திறம்படப் பணிபுரிவார்கள். குறிப்பிட்ட செயலின் மீதான தங்களது அறிவுபூர்வமான மதிப்பீட்டினையும் செயற்படுத்துவார்கள். வெறுமனே சிக்கல் - தீர்வு மட்டுமே இவர்களது இலக்கல்ல. ஒரு நிகழ்ச்சியில், தாங்கள் முதன்மை இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று போராடுவார்கள்.

இத்தகைய எதிர்வினையாற்றும் ஆளுமைப் பண்பினர் தங்கள் திறமை மற்றவர்களால் கவனிக்கப்ட வேண்டும் என்று விரும்புவர்களாக இருப்பார்கள்; மனித வள மேலாண்மைத் துறையில் இப்பண்பு மிக இன்றியமையாததாகும்.

எதிர்வினையாற்றும் ஆளுமையுடையவர்கள் பற்றி இற்றை நாள்களில் கூறப்பட்டுள்ள உளவியல் ஆய்வு முடிவுகள் பல தமிழின் செவ்வியல் இலக்கியங்களுடன் பொருந்துகின்றன என்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

This story is from the April 11, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the April 11, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
ஜி7 மாநாடு: பிரதமர் மோடி நாளை இத்தாலி பயணம்
Dinamani Chennai

ஜி7 மாநாடு: பிரதமர் மோடி நாளை இத்தாலி பயணம்

பிரதமராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வியாழக்கிழமை (13-ஆம் தேதி) இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

time-read
1 min  |
June 12, 2024
நீட் குளறுபடி: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
Dinamani Chennai

நீட் குளறுபடி: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு தடையில்லை

time-read
2 mins  |
June 12, 2024
தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது வங்கதேசம்
Dinamani Chennai

தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது வங்கதேசம்

டி20 உலகக் கோப்பை போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்' வெற்றி கண்டது.

time-read
1 min  |
June 11, 2024
பரஸ்பர புரிந்துணர்வில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்
Dinamani Chennai

பரஸ்பர புரிந்துணர்வில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார்

‘பரஸ்பர புரிதல் மற்றும் இருதரப்பு பிரச்னைகள் மீதான ஒருவருக்கொருவரின் அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் கனடாவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா எதிா்நோக்குகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 11, 2024
சிக்கிம் முதல்வரானார் பிரேம் சிங் தமாங்
Dinamani Chennai

சிக்கிம் முதல்வரானார் பிரேம் சிங் தமாங்

11 அமைச்சர்களும் பதவியேற்பு

time-read
1 min  |
June 11, 2024
60 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் பதிவு: பள்ளிகளில் தொடக்கம்
Dinamani Chennai

60 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் பதிவு: பள்ளிகளில் தொடக்கம்

நிகழ் கல்வியாண்டில் (2024-2025) 60 லட்சம் மாணவா்களுக்கு ஆதாா் பயோமெட்ரிக் புதுப்பித்தல், புதிய ஆதாா் பதிவு மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
June 11, 2024
Dinamani Chennai

அவசரமாக பிறப்பிக்கப்படும் உத்தரவு ஆவணப் பிழையாக கருதப்படும்

சவுக்கு சங்கர் வழக்கில் 3-ஆவது நீதிபதி

time-read
1 min  |
June 11, 2024
Dinamani Chennai

காவலருக்கு வெகுமதி, சான்று வழங்கி ஆணையர் பாராட்டு

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலரை நேரில் அழைத்து வெகுமதி, சான்று வழங்கி ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் பாராட்டினாா்.

time-read
1 min  |
June 11, 2024
Dinamani Chennai

40 வயதுக்கும் மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவரின் சான்று கட்டாயம்

போக்குவரத்து துறை உத்தரவு

time-read
1 min  |
June 11, 2024
3 கோடி வீடுகள் கட்ட நிதி
Dinamani Chennai

3 கோடி வீடுகள் கட்ட நிதி

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் 3 கோடி வீடுகள்கட்ட நிதியுதவி அளிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
June 11, 2024