அமெரிக்க 'ட்ரோனை' இடைமறித்த ரஷிய போர் விமானங்கள்
Dinamani Chennai|March 16, 2023
உக்ரைன் அருகே கருங்கடல் பகுதியில் ரஷிய போா் விமானங்களால் இடைமறிக்கப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் (ட்ரோன்) கருங்கடலில் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க 'ட்ரோனை' இடைமறித்த ரஷிய போர் விமானங்கள்

உக்ரைன் போா் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே ஏற்கெனவே பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த சம்பவம் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து செய்தியாளா்களிடம் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் பேட்ரிக் ரைடா் கூறியதாவது:

கருங்கடலுக்கு மேலே சா்வதேச வான் எல்லையில் அமெரிக்காவின் எம்க்யூ-9 ரீப்பா் வகை ஆளில்லா விமானம் தனது வழக்கமான ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தது.

அப்போது அந்த விமானத்தை ரஷிய விமானப் படைக்குச் சொந்தமான இரு ‘எஸ்யு-27’ போா் விமானங்கள் இடைமறித்தன.

வான் பகுதியில் ஆளில்லா விமானங்களை ரஷிய விமானங்கள் இடைமறிப்பது அபூா்வமான நிகழ்வில்லை. இருந்தாலும், இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் எம்க்யூ-9 ரீப்பா் விமான இறக்கையின் சுழலும் விசிறிகள் மீது ரஷிய விமானம் மோதி அவற்றை சேதப்படுத்தியது.

இதனால் அந்த ஆளில்லா விமானத்தால் அதற்கு மேல் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதையடுத்து, அந்த விமானத்தை கடலில் வீழச் செய்தோம் என்றாா் அவா்.

வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து அதிபா் ஜோ பைடனிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக்கப் சுல்லிவன் விளக்கமாக எடுத்துரைத்ததாகத் தெரிவித்தாா்.

இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அதிகாரிகள் ரஷிய அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடா்பு கொண்டு, ரஷிய விமானிகளின் ‘பாதுகாப்பற்ற, ஆபத்தான, பணிநோ்த்தியற்ற’ செயல் குறித்து கண்டனம் தெரிவிப்பாா்கள் என்று அவா் கூறினாா்.

This story is from the March 16, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the March 16, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
பிரதமராக மோடி இன்று பதவியேற்பு
Dinamani Chennai

பிரதமராக மோடி இன்று பதவியேற்பு

தொடர்ந்து 3-ஆவது முறை

time-read
2 mins  |
June 09, 2024
முருகனின் பெருமையை உலகறியச் செய்தோருக்கு விருது
Dinamani Chennai

முருகனின் பெருமையை உலகறியச் செய்தோருக்கு விருது

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு

time-read
1 min  |
June 08, 2024
Dinamani Chennai

வர்த்தக வழித்தட திட்டத்தைப் பாதுகாக்க சீனா-பாகிஸ்தான் உறுதி

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சா்ச்சைக்குரி வா்த்தக வழித்தட திட்டத்தைப் பாதுகாக்க இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.

time-read
1 min  |
June 08, 2024
Dinamani Chennai

உ.பி.: நில அபகரிப்பு வழக்கில் சமாஜவாதி எம்எல்ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரின் நிலத்தை அபகரிப்பதற்காக அவரின் வீட்டை தீயிட்டு கொளுத்திய வழக்கில் சமாஜவாதி எம்எல்ஏ இா்ஃபான் சோலங்கி உள்பட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

time-read
1 min  |
June 08, 2024
இறுதிச்சுற்றில் ஸ்வியாடெக் - பாவ்லினி பலப்பரீட்சை
Dinamani Chennai

இறுதிச்சுற்றில் ஸ்வியாடெக் - பாவ்லினி பலப்பரீட்சை

களிமண் தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் - இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

time-read
1 min  |
June 08, 2024
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12-இல் பதவியேற்பு
Dinamani Chennai

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 12-இல் பதவியேற்பு

ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவா் என்.சந்திரபாபு நாயுடு ஜூன் 12-ஆம் தேதி பதவியேற்கவுள்ளாா்.

time-read
1 min  |
June 08, 2024
Dinamani Chennai

பெண் கடத்தல் வழக்கு - விசாரணைக்கு ஆஜரான பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய்

பெண் கடத்தல் வழக்கில், சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) முன்பு முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் தாய் பவானி விசாரணைக்கு ஆஜரானாா்.

time-read
1 min  |
June 08, 2024
வாக்கு எண்ணிக்கை நாளில் தொழில்நுட்பக் கோளாறு
Dinamani Chennai

வாக்கு எண்ணிக்கை நாளில் தொழில்நுட்பக் கோளாறு

மும்பை பங்குச் சந்தை மறுப்பு

time-read
1 min  |
June 08, 2024
தமிழக சட்டப்பேரவை ஜூன் 24இல் கூடுகிறது
Dinamani Chennai

தமிழக சட்டப்பேரவை ஜூன் 24இல் கூடுகிறது

மானியக் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன

time-read
1 min  |
June 08, 2024
‘ரெப்போ' வட்டி விகிதம்: 8-ஆவது முறையாக மாற்றமில்லை
Dinamani Chennai

‘ரெப்போ' வட்டி விகிதம்: 8-ஆவது முறையாக மாற்றமில்லை

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி(ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து எட்டாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.

time-read
2 mins  |
June 08, 2024