வன்முறையை ஒடுக்க முப்படைகளுக்கு உத்தரவு
Dinamani Chennai|May 11, 2022
இலங்கையில் பலி 8-ஆக உயர்வு; அமைதி காக்க அதிபர் வேண்டுகோள்
வன்முறையை ஒடுக்க முப்படைகளுக்கு உத்தரவு

கொழும்பு, மே 10:

இலங்கையில் வன்முறையை ஒடுக்கும் வகையில், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முப்படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இதற்கிடையே, திங்கள்கிழமை நடந்த வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்தது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்ச ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் கொழும்பில் அதிபர் அலுவலகம் அருகேயுள்ள காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளர்கள் திங்கள்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். இதையறிந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மகிந்தவின் ஆதரவாளர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபட்சபிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். ஆனாலும், வன்முறையை நிறுத்த முடியவில்லை. அம்பந்தோட்டாவில் உள்ள ராஜபட்ச சகோதரர் களின் தந்தை நினைவிடம், வீடு, குருநாகலில் உள்ள மகிந்தவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். மேலும் 14 முன்னாள் அமைச்சர்கள், 18 எம்.பி.க்கள், ராஜபட்ச குடும்பத்தின் ஆதரவு தலைவர்களின் வீடுகள் தாக்கப்பட்டன.

கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் நடந்த வன்முறையில் சுமார் 250 பேர் காயமடைந்தனர். ஆளும் கட்சி எம்.பி. அமரகீர்த்தி அதுகொரலா உள்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8-ஆக அதிகரித்தது.

துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு: இந்நிலையில், வன்முறைக்குப் பின்னர் முதல் முறையாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், 'பொதுமக்கள் அமைதிகாக்கும் படியும், குடிமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தும்படியும் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

This story is from the May 11, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the May 11, 2022 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
பிற மாநிலங்களும் பின்பற்றும் தமிழக அரசின் நலத் திட்டங்கள்
Dinamani Chennai

பிற மாநிலங்களும் பின்பற்றும் தமிழக அரசின் நலத் திட்டங்கள்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுவதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.

time-read
2 mins  |
May 08, 2024
Dinamani Chennai

தமிழகத்தில் அடுத்த 4 நாள்கள் வெப்பத்தின் தாக்கம் குறையும்

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 08, 2024
8 சதவீதம் உயர்ந்த கனிம உற்பத்தி
Dinamani Chennai

8 சதவீதம் உயர்ந்த கனிம உற்பத்தி

இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.

time-read
1 min  |
May 08, 2024
ராஃபா எல்லையைக் கைப்பற்றியது இஸ்ரேல்
Dinamani Chennai

ராஃபா எல்லையைக் கைப்பற்றியது இஸ்ரேல்

எகிப்தையும் காஸாவின் ராஃபா நகரையும் இணைக்கும் முக்கிய எல்லை வழித்தடத்தை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது.

time-read
1 min  |
May 08, 2024
ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்
Dinamani Chennai

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

கஜஸ்தானில் நடைபெற்ற 22 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் இளையோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.

time-read
1 min  |
May 08, 2024
இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு
Dinamani Chennai

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

கடந்த 2022-23 வரையிலான 3 ஆண்டு காலத்தில், இந்தியாவில் குடும்ப சேமிப்புகள் ரூ.14.16 லட்சம் கோடியாக சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் தேசிய கணக்குப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 08, 2024
ராஜஸ்தானை வென்றது டெல்லி
Dinamani Chennai

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

time-read
1 min  |
May 08, 2024
Dinamani Chennai

மாலத்தீவில் இருந்து 51 இந்திய ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பினர்

மாலத்தீவில் மருத்தவ ஹெலிகாப்டா்களை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 51 இந்திய ராணுவ வீரா்கள் வெளியேறிவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 08, 2024
பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி
Dinamani Chennai

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

பொய்களையும் வெறுப்பையும் பரப்புவோரை நிராகரிக்குமாறு மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

time-read
1 min  |
May 08, 2024
‘அக்னிபத்’ திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி
Dinamani Chennai

‘அக்னிபத்’ திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

கும்லா (ஜார்க்கண்ட்): மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் \"அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார்.

time-read
1 min  |
May 08, 2024