Poging GOUD - Vrij

காலச் சக்கரத்தின் சுழற்சிக்கேற்ப அடியெடுக்கும் வீரகேசரி

Virakesari Daily

|

August 06, 2025

இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கான ஊடக முயற்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தோற்றம் பெற்றன. பெரும்பாலும் இவை மதத்தைப் பரப்பும் நோக்கில் அமைந்திருந்தன. காலப்போக்கில் கல்வி மறுமலர்ச்சி, சமூக விழிப்புணர்வு, ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டங்கள் என அவை வளம் பெற்றன. இப்பின்னணியில் ஒரு பரந்த தமிழ் சமூக அரசியல் குரலுக்கான தேவையும் உணரப்பட்டது.

- இஸட். ஏ. ஸன்ஹிர், உதவிக் கல்விப் பணிப்பாளர், (ஓய்வு நிலை)

காலச் சக்கரத்தின் சுழற்சிக்கேற்ப அடியெடுக்கும் வீரகேசரி

வீரகேசரியும் தோற்றம் பெற்றது.

இன்று, வீரகேசரி ஒன்பதரைத் தசாப்தங்களைத் தாண்டிப் பயணிக்கத் தொடங்கும் தினமென்பதையிட்டு அதன் வாசகர்கள் மட்டுமன்றி தமிழ் கூறும் முழு உலகும் மகிழ்வெய்தும் என்பதை ஐயம் திரிபுறக் கூற முடியாது.

இப்பத்திரிகையானது இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து, வியர்வையை உரமாக்கி உழைத்து, ஓடாய்த் தேய்ந்து போன சமூகமொன்றின் உரிமைக் குரலாக, மலையகத்தை மையப்படுத்தி அது ஆரம்பிக்கப்பட்டபோதும் காலப்போக்கில் இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வியலின் அனைத்துத் துறைகளிலும் அகலக் கால்பதித்து அடியெடுத்து வைத்து வீறுநடைபோடும் சிம்மமாகக் குரல் கொடுத்து வருகின்றது.

வீரகேசரி நாளிதழை தென் தமிழ்நாட்டின், ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார், கொழும்பு செட்டியார் தெருவில் 06.08.1930 புதன் அன்று எட்டுப்பதிப் பக்கங்களுடன் ஆரம்பித்து வைத்தார்.

இதழின் முதல் செய்தித் தலைப்பு ‘இன்றைய புதினங்கள்’ என்பதாகும். அன்றைய புதினம், இன்று வரலாறாகி நிற்கின்றது.

முதற் பக்கத்தின் இறுதி வசனம் ‘வீட்டிற் கழகு வீரகேசரியை வரவேற்றல்’ என்பதாகும்.

வீர நாமம் கொண்ட வீரகேசரியை வீடுகளில் வரவேற்றதால் தான், கையச்சுக் கோர்ப்பில் உருவாகி, ஐந்து சதத்துக்கு விற்பதற்கென ஆரம்பிக்கப்பட்ட, எட்டு பக்கங்களை கொண்ட இப்பத்திரிகை இன்று எம்மத்தியில் தனியான இடத்தைப் பிடித்துள்ளது.

காலப்போக்கில் கணினிமயமாக்கப்பட்டு, இன்றைய எண்ணிம உலகில் செய்திகளுடன் கருத்துக்களையும், ஆய்வுகளையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் தாங்கி மின்பத்திரிகையாகவும் 2001 முதல் உலா வருகின்றது.

MEER VERHALEN VAN Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size