Poging GOUD - Vrij
தென் இலங்கைக் கரையினில் தொன்மைமிகு சிவாலயம்
Virakesari Daily
|July 24, 2025
இலங்கையின் தென் கரையில் காலி மாநகரில் மீனாட்சி சுந்தரேஸ்வரம் என்ற பழம்பெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலயம் அமைந்துள்ளது. இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய அரசர்களால் திருப்பணி செய்யப்பட்ட இச்சிவாலயம் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை கொண்டதாக நம்பப்படுகின்றது.
-
தமிழ் அரசர்களான பாண்டியரின் செல்வாக்கு தென்னிலங்கையில் மேலோங்கி இருந்தமைக்கு இச்சிவாலயம் சான்று பகர்கின்றது. பாண்டியரின் இலச்சினையான மீன் சின்னம் இவ்வாலய வாயிலிலிருந்து கருங்கற்தூணில் பொறிக்கப்பட்டுள்ளமையும் கருங்கல்லிலாலான ஆலய அர்த்த மண்டப விமானத்தில் குறித்த பாண்டியரின் இலச்சினையான மீன் சின்னங்கள் நான்கு பொறிக்கப்பட்டுள்ளமையும் இச்சிவாலயத்துக்கும் தென்னிந்திய தமிழ்ப் பேரரசான பாண்டிய அரசுக்கும் இருந்த தொடர்பை வெளிப்படுத்துகின்றது.
வருடாந்த மகோற்சவம் சித்திரா பௌர்ணமி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும். இவ்வாலயம் தென்னிலங்கைக் கரையினிலே தென் மாகாணத்தின் தலைநகரான காலி மாநகரின் மத்தியிலே மாவட்ட செயலகம், மாநகர சபை அலுவலகம், அஞ்சல் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உட்பட பல அலுவலகங்களுக்கு அண்மித்ததாயமைந்துள்ளது.
இந்த ஆலயம் தொடர்பான புராண கால செய்திகள் பலவும் உள்ளன. திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், மாமாங்கேஸ்வரம் ஆகிய சிவாலயங்களில் இராமபிரான் வழிபட்டமை போன்று திருக்கோணேஸ்வரம், தொண்டீஸ்வரம், மீனாட்சி சுந்தரேஸ்வரம் ஆகிய சிவத்தலங்களில் இராவணேஸ்வரன் வழிபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அனுமான் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும்போது இந்த காலி சிவாலயத்தில் வழிபட்டதாகவும் கூறப்படுகின்றது. அனுமான் ஆகாய மார்க்கமாகத் தூக்கி வந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இச்சிவாலயத்துக்கு அருகில் விழுந்ததாகவும் கூறப்படுகின்றது. இன்றும் சஞ்சீவிச் செடிகள் உள்ள ஒரு மலை இச்சிவாலயத்துக்குச் சமீபமாகவுள்ளது.
'ருமஸ்தலகந்த' என்று அழைக்கப்படும் மலையே அதுவாகும். அப்பகுதி மக்கள் அனுமானால் கொண்டு வரப்பட்ட மலையின் ஒரு பகுதியே ருமஸ்தலகந்த மலை என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இவற்றை நோக்குமிடத்து புராண கால மான இராமாயண காலத்து வரலாறு கொண்டதும் உலகிலுள்ள பழம்பெரும் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும் இலங்கையின் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையும் வரலாற்று சிறப்பும் கொண்ட சிவாலயமாகவும் காலி மீனாட்சி சுந்தரேஸ்வரத்தைக் கொள்ளலாம்.
Dit verhaal komt uit de July 24, 2025-editie van Virakesari Daily.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
