Poging GOUD - Vrij
குழந்தைகளை பெற்றெடுக்க பாடசாலை மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா
Virakesari Daily
|July 09, 2025
ரஷ்யாவின் சில பகுதிகளில் டீன் ஏஜ் பாடசாலை மாணவிகள் குழந்தைகளை பெற்றெடுக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ரஷ்யாவின் 10 மாகாணங்களில் இந்தப் புதிய திட்டம் கடந்த சில மாதங்களாகவே அமலில் உள்ளது. இது உள்நாட்டிலும், உலக அரங்கிலும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
-
ரஷ்ய ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், அதற்கான எதிர்ப்புக் குரல் உடனுக்குடன் நசுக்கப்பட்டு விடுவதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது. மேலும், ரஷ்ய மக்கள் தொகை குறைந்துவருவதால், அதை ஈடுகட்டவே இந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
எப்படிக் கூறினாலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்தத் திட்டத்தின் பின்னணி குறித்து பார்ப்போம்
பின்னணி என்ன? கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யா, அதிக குழந்தை பெற்றெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. ஆனால், தாய்மை அடையும் வயதை எட்டிய பெண்களுக்கு மட்டுமே அந்தச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்த முறை டீன் ஏஜ் மாணவிகள் குழந்தை பெற்றெடுக்குமாறு ரஷ்யா ஊக்குவித்து, அதற்கு ரூ.1 லட்சம் (இந்திய மதிப்பில்) வரை தருகிறது.
ரஷ்ய நாட்டின் குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாகக் குறைந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அந்நாட்டு அரசின் புள்ளிவிவரங்களின்படி 2023ல் ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.41 சதவீதமாக இருந்தது. இது மக்கள் தொகை சமநிலையைப் பெறுவதற்குத் தேவையான 2.05%ஐ விட மிக மிகக் குறைவு என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில்தான் ரஷ்யாவில் டீன் ஏஜ் மாணவிகள் குழந்தை பெற்றுக்கொள்வது ஊக்குவிக்கப்படுகிறது.
இது குறித்து அந்நாட்டில் இயங்கும், மக்கள் மனநிலையை ஆய்வு செய்யும் ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் 43% மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராகவும், 40% மக்கள் இதற்கு உறுதுணையாகவும் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
ஆதரவுக்கும், எதிர்ப்புக்கும் பெரிய வித்தியாசமில்லாததால் இயல்பாக அரங்கேறி வருகிறது இளம் மாணவிகள் தாயாகும் போக்கு. புதினின் பார்வை: ரஷ்ய ஜனாதிபதி புடின், மிக வலுவான மக்கள் தொகையே, வல்லரசு வளமாகக் காரணமாகும் என்று நம்புபவராக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மக்கள் தொகை அதிகமாக இருந்தால், பரந்துபட்ட நிலபரப்பின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும், ராணுவமும் ஆள்பலம் பெறும் என்று புடின் தீவிரமாக நம்புகிறார்.
Dit verhaal komt uit de July 09, 2025-editie van Virakesari Daily.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
