Poging GOUD - Vrij
நீடித்திருக்கக்கூடிய மாற்றத்துக்கான கருத்தொருமிப்பை கட்டியெழுப்புதல்
Virakesari Daily
|June 25, 2025
சமகாலத்தின் அறிகுறிகளைப் புரிந்து கொள்வதில் அரசாங்கம் முன் அவதானத்துடனும் நல்லறிவுடனும் நடந்து கொள்கிறது. நாடு தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடியில் உழன்று கொண்டிருக்கிறது. கடந்த 76 வருடங்களாக இலங்கையை ஆட்சிசெய்த எதிர்க்கட்சிகளின் கூட்டு ஒன்றுக்கு முகங் கொடுப்பதில் அரசாங்கம் வெல்லமுடியாத சவால்களை எதிர்நோக்குகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக அவமதித்து ஈரானின் அணுவசதிகள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், உலகம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.
-
இத்தகைய கொந்தளிப்பான நிலைவரத்துக்கு மத்தியில், மிகவும் நிதானமாக செயற்பட வேண்டியதும் கோட்பாட்டு அடிப்படையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பரிசோதனையில் யதார்த்த நிலைவரத்தை புரிந்துகொள்ளாமல் செயற்படுவதை தவிர்க்க வேண்டியதும் அவசியமானதாகும். குறிப்பாக, சிறிய மற்றும் அபிவிருத்தி குன்றிய நாடுகளின் அரசாங்கங்கள் உலக அதிகார அரசியலினால் திணிக்கப்படுகின்ற கட்டமைப்பு ரீதியான நெருக்குவாரங்களுக்கு மத்தியில், அவற்றின் கோட்பாட்டு நோக்குகளில் சமநிலையைப் பேணுவது அவசியமாகும்.
சர்வதேச அதிகார கட்டமைப்பை அரசாங்கம் முழுமையாக உணர்ந்திருக்கிறது போன்று தெரிகிறது. பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற முறைகளில் இதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
அரசாங்க தலைமைத்துவத்தின் கோட்பாடு மார்க்சியத்தில் வேர்கொண்டதாக இருந்தாலும், புதிய பாதை ஒன்றை வகுப்பதற்காக உலக முதலாளித்துவ முறைமையையும் சர்வதேச நாணய நிதியம் போன்ற அதன் அதிகாரக் கட்டமைப்புகளையும் இன்னமும் விமர்சனம் செய்யவில்லை. பதிலாக, பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த யோசனைகளுக்கு இசைவாக அரசாங்கம் செயற்படுகின்றது. அத்தகைய தந்திரோபாயம் "சமநிலையான நடத்தை" ((Balance behaviour) யதார்த்தவாத கோட்பாட்டாளர்கள் (Theorists of structural realism) வர்ணிக்கின்ற போக்குடன் ஒத்துப் போகிறது. உலக நிறுவனங்களின் அதிகாரத்தை விளங்கி ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு இசைவான முறையில் தேசிய கொள்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உலக நிதிமுறைமையின் கண்ணாடி வில்லையின் ஊடாக நோக்கும்போது சர்வதேச நாணய நிதியம் அமெரிக்கா தலைமையிலான தற்போதைய சர்வதேச பொருளாதார அதிகாரக் கட்டமைப்பை உருவகப்படுத்தி நிற்கிறது. இலங்கை மக்கள் தாங்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்ற பொருளாதார இடர்பாடுகளின் சுமையை சமுதாயத்தின் சகல பிரிவினரும் ஒப்புரவான முறையில் பகிர்ந்து கொள்ளவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகள் அந்த ஒப்புரவற்ற சுமையை குறைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் இணங்கிக்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையின் நிபந்தனைகளில் பெரும்பாலானவற்றை அரசாங்கம் நிறைவேற்றுகின்றது.
Dit verhaal komt uit de June 25, 2025-editie van Virakesari Daily.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size

