Poging GOUD - Vrij
சமன்செய்து சீர்தூக்கும் கோல்!
Dinamani Virudhunagar
|November 03, 2025
தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.
உரல், உலக்கை, திருகை, ஆட்டுக்கல், அம்மி, அச்சாணி போன்றவை அருங்காட்சியகத்தில் மட்டுமே இன்றைக்குக் காணக் கூடியனவாக உள்ளன. இன்னும் அறியப்படாத பல பொருள்கள் இலக்கியங்களிலே சுட்டப்பட்டிருக்கின்றன. அவை பொருளாக மட்டுமின்றி சமுதாயத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றன; அவற்றுள் ஒன்றுதான் கோல் என்னும் கருவி.
கோல் என்பதற்கு மரத்தாலான கழி என்பதுதான் இயல்பான பொருள். அடிப்படையில் அவை அளவினைச் சுட்டுகின்ற அளவுகோலாகத்தான் அறியப்பட்டன. அதைத்தான் நாம் இன்றைய காலத்தில் 'ஸ்கேல்' என்கிறோம். அடிக்கோல் மாறி 'அடிஸ்கேல்' ஆகிப்போனது.
கோலில் பல வகைகள் உண்டு. ஊன்றுகோல், அளவைக்கோல், துலாக்கோல், தீக்கடைக்கோல் என்னும் ஞெலிகோல், தலைக்கோல், எழுதுகோல், அரசர்கள் கரத்திலிருக்கும் செங்கோல் வரையிலும் அவை நீள்கின்றன.
இலக்கியங்களிலும் பல இடங்களில் கோல் குறித்துச் சுட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, ஔவையார் தான் குறிப்பிடுகிற 'வரப்புயர' என்னும் பாடலில் ‘குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான்' என்கிறார். திருவள்ளுவரும் சில குறள்களில் வெவ்வேறு பொருளில் கோலினைக் குறிக்கிறார். அவற்றுள் 'சமன்செய்து சீர்தூக்கும் கோல்' என்னும் அது எந்தக் கோலாக இருக்கும்?
ஏனென்றால் இத்தனை கோல்களும் சமுதாய வளர்ச்சியை அடையாளம் காட்டுகிற சான்றுகோல்களாக விளங்குகின்றன.
கடவுள் தொடங்கி அருளாளர்கள் வரையிலும் இந்தக் கோலைப் பற்றியிருக்கிறார்கள் என்பதை இலக்கியங்களில் அறிய முடிகிறது.
தன் செங்கரங்களால் வடித்த வேலினை எடுத்துப் பகையரசரைத் துரத்தும் பணியைச் செய்யும் கோமானான கோபாலன், கோலினை எடுத்துப் பசுக்களை (புல்லாங்குழலாகிய கோலெடுத்து ஆன்மாக்களையும்) வசப்படுத்துவதிலும் வல்லவனாக விளங்குகிறான் என்று ஒரு பாடலும் உண்டு.
முருகனின் கையில் பொதுவாக வேல் தான் இருக்கும். அதனாலேயே வேலாயுதன் என்ற பெயரும் பெற்றவன். ஆனால் பழங்கால சித்தர் மரபுகளிலும், தண்டம் என்னும் கோல் கைக்கொண்ட முருகன் வடிவம் உண்டு. முருகன் துறவுபூண்டு எல்லா அணிகலன்களையும் நீக்கிக் கோலை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொண்டான். இந்தக் கோல் அவனுடைய தவப் பெருமையையும் ஒடுக்கத்தையும் குறிக்கிறது.
Dit verhaal komt uit de November 03, 2025-editie van Dinamani Virudhunagar.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
1 min
June 07, 2026
Dinamani Virudhunagar
ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.
2 mins
June 07, 2026
Dinamani Virudhunagar
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Dinamani Virudhunagar
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Virudhunagar
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Virudhunagar
வேளாண் பல்கலை. பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
1 min
June 07, 2026
Dinamani Virudhunagar
கர்நாடக அமைச்சராக ராமலிங்க ரெட்டி தொடர்வார்
ரண்தீப் சிங் சுர்ஜேவாலா
1 min
June 07, 2026
Dinamani Virudhunagar
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Dinamani Virudhunagar
தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்
1 mins
June 07, 2026
Dinamani Virudhunagar
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Listen
Translate
Change font size
