Poging GOUD - Vrij
கச்சத்தீவு மீட்பு- தீர்மானங்கள் தீர்வாகாது!
Dinamani Virudhunagar
|April 05, 2025
இந்தியா - இலங்கை இடையிலான பேச்சுவார்த்தை மூலம் கச்சத்தீவை மீட்பது அல்லது குத்தகைக்கு எடுப்பது போன்ற தீர்வுகள் முன்மொழியப்பட்டாலும், இலங்கை அரசு அதை ஏற்க வேண்டும். தற்போதைய அரசியல் சூழலில் இலங்கை அரசு இதற்குச் சம்மதிக்க வாய்ப்பு குறைவு.
கச்சத்தீவை மீட்பது குறித்தான விவகாரத்தில் என்ன நடந்தது? தற்போது என்ன நடக்கிறது? இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கையொப்பமானபோது மறைந்த முதல்வர் மு.கருணாநிதி என்ன செய்தார்? கச்சத்தீவை மீட்பது தொடர்பாக இந்தியா-இலங்கை இரு நாடுகளிடையேயான ஒப்பந்த ஷரத்துகள் என்ன தெரிவித்திருக்கின்றன? ஆக, இனி கச்சத்தீவை மீட்க இந்திய அரசு முனைந்தால், அது நிறைவேறுமா என்கிற கேள்விகள் எழுகின்றன.
கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்கிற கேள்வி இன்று நேற்றல்ல, சற்றேறக்குறைய 1920-களில் இருந்து தொடர்கதையாகி வருகிறது. பாக் நீரிணை - மன்னார் வளைகுடா பகுதிகளில் எல்லையை வரையறுப்பதற்காக 1921 அக்டோபர் 24-ஆம் தேதி கொழும்பு நகரில் சென்னை மாகாண அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சுங்க வரிக்கான முதன்மை கலெக்டர் ஹார்ஸ்பர்க், ‘கச்சத்தீவு இலங்கைக்கு வரும்படி எல்லையை வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநாட்டை நிறுத்திவிடலாம்’ என்ற கருத்தை முன்வைத்தார்.
இதை ஏற்காத இந்தியக் குழு, வேண்டுமானால் அந்தப் பகுதியின் மீன்பிடி உரிமையை மட்டும் தருவதாகச் சொன்னது. ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை காலனி அலுவலகம் ஏற்கவில்லை. ஆகவே, சட்டரீதியாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கே வரவில்லை.
ஆனால், தற்போது கச்சத்தீவு இலங்கை வசம் உள்ளதாகவும், அதை மீட்க வேண்டும் என இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருவதையும் நாம் பார்த்து வருகிறோம். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகும் இந்தப் பிரச்னை அவ்வப்போது எழுப்பப்பட்டது. இன்று வரை இந்தப் பிரச்னை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதன் மூலம் மட்டுமே கச்சத்தீவை மீட்க முடியுமே தவிர, தனிநபரின் முயற்சியால் ஏதும் பலன் விளையாது. ஆனால், தேர்தல் காலத்தில் மட்டுமே கச்சத்தீவைப் பற்றிப் பேசுவது சந்தர்ப்பவாதமா அல்லது வாக்கு அரசியலா என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
Dit verhaal komt uit de April 05, 2025-editie van Dinamani Virudhunagar.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்
அமெரிக்கா ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Virudhunagar
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Virudhunagar
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Virudhunagar
ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
2 mins
May 20, 2026
Dinamani Virudhunagar
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Virudhunagar
வரலாறு படைத்தார் யானிக் சின்னர்
'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'
1 min
May 19, 2026
Dinamani Virudhunagar
முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு
தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Virudhunagar
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Virudhunagar
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Dinamani Virudhunagar
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
May 19, 2026
Translate
Change font size

