Poging GOUD - Vrij
இணையவழி சூதாட்ட தடைச் சட்டம்-வெற்றி கிட்டுமா?
Dinamani Tiruvarur
|September 09, 2025
பணம் வைத்து, சூதாட்டம் செய்யப்படும் இணையவழி விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்கிறது. அது மட்டுமல்ல, பணத்தை வைத்து விளையாடும் இந்த சூதாட்டங்கள் தொடர்பாக தயாரிக்கப்படும் விளம்பரங்கள், தயாரிப்பாளர்கள், நடிப்பவர்களை இந்தச் சட்டம் தடை செய்கிறது.
இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம், சூதாட்டம் என்னும் கேடால் வரும் துன்பங்களை மையமாகக் கொண்டது மட்டுமல்ல; அதில் வரும் உபகதையான நளன் சரித்திரம் சூதாட்டத்தால் நளச் சக்கரவர்த்தியின் குடும்பம் அடைந்த இன்னல்களை விவரிக்கிறது.
திருக்குறள் பொருட்பால் அதிகாரம் 94-க்கு 'சூது' என தலைப்பிட்டு சூதாட்டம் தரும் இன்னல்களைப் பற்றி திருவள்ளுவர் விளக்குகிறார். சூதில் பெறும் வெற்றி, தூண்டில் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியதைப் போன்றதாகும் என்று எச்சரிக்கிறார். வெற்றி பெறுவது ஆயினும், சூதாட்ட களத்துக்குப் போகக் கூடாது என வள்ளுவர் அபாய சங்கை ஊதுகிறார்.
1968-1971-ஆண்டுகளில் சென்னை மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி மாணவனாக நான் இருந்தபோது, மாணவர் சமுதாயப் பணி அமைப்பின் மூலமாக கிண்டி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை குதிரைப் பந்தயம் நடக்கும் நாள்களில் பயணச் சீட்டு இல்லாமல் பயணிக்கும் பயணிகளைப் பிடிக்கும் பணியில் நான் சந்தித்த அனுபவங்கள் என்னைத் திடுக்கிட வைத்தன.
'ஜாக்பாட்' டிக்கெட் வாங்க, ஆயிரக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அந்தப் பயணி, ஐந்து ரூபாய்க்கு வாங்க வேண்டிய மின்சார ரயிலில் பயணிப்பதற்கான பயணச் சீட்டை வாங்கியிருக்கமாட்டார். பிடித்து அபராதம் போட்டால், தன்னுடைய ஜாக்பாட் காம்பினேஷனுக்கு பணம் குறைகிறது என வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு குற்ற உணர்வு இல்லாமல் விட்டுவிடும்படி கெஞ்சுவார்.
ஓடும் குதிரையின் மூலமாக தனியார் முதலாளிக்கு போகும் பணம், ஓடும் ரயில் மூலமாக நாட்டுக்குப் போகட்டும்; இரண்டும் ஓடத்தான் செய்கின்றன எனக் கறாராகச் சொல்லி அபராதம் வசூலிப்பேன். காலையில் உற்சாகமாக சென்றவர்கள், பந்தயத்தில் பணத்தை இழந்து, குதிரையையும், குதிரை ஓட்டுபவனையும் அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டு வருவதும், சூது குறித்து காலம் எனக்குக் கற்பித்த பாடம்.
சரித்திரம் என்பது திரும்பத் திரும்ப வரும் ஒரே விஷயம் என்பார்கள். தாயக்கட்டையாக உருவான சூது, சீட்டு கட்டு வழியாக குதிரைப் பந்தயமாக உருமாறி, அரசே நடத்தும் லாட்டரி சீட்டாக நிறம் மாறி, இன்றைய நவீன யுகத்தில் இணையவழி சூதாட்டமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.
Dit verhaal komt uit de September 09, 2025-editie van Dinamani Tiruvarur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா
சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
June 24, 2026
Dinamani Tiruvarur
கத்தாரில் எரிவாயு ஆலை தீ விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
கத்தார் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min
June 24, 2026
Dinamani Tiruvarur
100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு
'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
1 mins
June 24, 2026
Dinamani Tiruvarur
ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.
1 min
June 24, 2026
Dinamani Tiruvarur
ஹஜ் பயணம்: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
1 min
June 24, 2026
Dinamani Tiruvarur
சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?
முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
1 min
June 24, 2026
Dinamani Tiruvarur
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Tiruvarur
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு
முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
1 min
June 23, 2026
Dinamani Tiruvarur
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்
தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு
1 mins
June 23, 2026
Dinamani Tiruvarur
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Translate
Change font size
