Facebook Pixel குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு | Dinamani Tiruvannamalai - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு

Dinamani Tiruvannamalai

|

September 12, 2025

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் மீதான 10 நாள்கள் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, செப். 11:

மசோதாக்கள் மீது தமிழக ஆளுநர் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு தொடுத்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஆளுநர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு, ஆளுநர் தாமதப்படுத்திய மசோதாக்களுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கியது.

மேலும், மசோதாக்கள் மீது ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பில் தெளிவுரை கோரும் வகையில் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடிதம் அனுப்பினார். அதைப் பரிசீலித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தக்கூடிய விவகாரம் என்பதால் அவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதிமுதல் விசாரணையை அரசியல் சாசன அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி பி.ஆர்.க வாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டதற்கு ஆதரவாகவும் மத்திய அரசு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநில அரசுகள் வாதங்களை முன்வைத்தன.

தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு விதிக்கப்பட்டதற்கு ஆதரவாகவும், குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டதற்கு எதிராகவும் தங்களுடைய வாதங்களை முன்வைத்தன.

MEER VERHALEN VAN Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

June 18, 2026

Dinamani Tiruvannamalai

ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

கேரள முன்னாள் முதல்வர் மகனிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை

பண முறைகேடு வழக்கு

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!

அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

June 18, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நாடுகளுக்கு இடையே வர்த்தகம், தொடர்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பு

பிரதமர் மோடி யோசனை

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvannamalai

ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி

தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஏச்) நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்

'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

வரலாற்றுப் பொக்கிஷங்கள் !

பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

3 mins

June 17, 2026

Translate

Share

-
+

Change font size