Poging GOUD - Vrij
புலமை கனிந்த போற்றிப் பாடல்
Dinamani Tiruvallur
|November 30, 2025
பத்தொன்பதாம் நூற்றாண்டைத் தம் புலமைத் திறத்தால் ஆண்டவர் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவ ருக்குச் சைவமும் தமிழுமே மூச்சு. மறைவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்புவரை கவிதை பாடிய வர். எந்தக் கருத்தை அறிந்தாலும் அதை மேலும் அழகுபடுத்திப் பாடுவது அவருக்கு இயல்பு. நலி வுற்றுப் படுக்கையில் கிடந்த அவரைக் காண வந்த கஞ்சனூர் அக்கினிலிங்க சாஸ்திரி, சிவா னந்த லகரியில் உள்ள 'ஸதா மோஹ அடவ்யாம்' என்னும் பாடலை விளக்கினார்.
“சிவனே! எங்கும் நிறைந்தவனே! தலைஓடு ஏந்திப் பிச்சைக்குச் செல்பவனே! என் மனம் என்னும் குரங்கு எப்போதும் மோகம் என்னும் காட்டில் திரிகிறது. பெண்களின் மார்பகமாகிய மலைகளில் கூத்திடுகிறது. ஆசை என்னும் கிளை களில் கண்டபடி சுற்றுகிறது. அதை அன்பென் னும் கயிற்றால் கட்டி உன் வசம் ஆக்கிக்கொள்” என்பது அப்பாடலின் கருத்து. அதைக் கேட்டு மகிழ்ந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உடனே அந் தப் பாட்டின் இறுதிப் பகுதியை, தில்லையில் ஆடும் பெருமானே! மனக் குரங்கினைப் பக்தி என்னும் கயிற்றால் கட்டி அதையும் உன்னோடு சேர்த்துக்கொண்டு பிச்சைக்குச் செல்க” என்று சிறிது மாற்றி மெருகூட்டி,
மோகமாம் அடவி திரிந்து அரி வையர்தம் முலைக்குவட்டிடைநடம் ஆடித் தாகமார் ஆசைத் தருக்குலம் தோறும் தாவுமென் புன்மனக் குரங்கைப் பாகமார் பத்தி நாண்கொடு கட்டிப் பலிக்குநீ செல்கயான் கொடுத்தேன் ஏகநாயகனே! தில்லையில் ஆடும் இறைவனே! எம்பெரு மானே.
என்று பாடினார். இத்தகைய பிள்ளையவர் கள் சேக்கிழாரிடத்தும் சிவஞான முனிவரிடத் தும் ஈடுபாடு கொண்டவர். இதற்குச் சான்று, உறையூர்ப் புராணத்தில் திருநாவுக்கரசர் மீது அவர் பாடியுள்ள போற்றிப் பாடல்.
சேக்கிழார் பெரிய புராணத்தில் நான்கு இடங்களில் திருநாவுக்கரசரின் தோற்றப் பொலிவைப் பாடியுள்ளார்.
Dit verhaal komt uit de November 30, 2025-editie van Dinamani Tiruvallur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள்: அச்சத்தைப் போக்க முயற்சிக்கப்படும்
அணுசக்தி விபத்தால் ஏதேனும் துரதிருஷ்டவசமான சம்பவம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு நிர்ணயிக்க நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரம் தொடர்பான அச்ச உணர்வைப் போக்க முயற்சிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2 mins
May 20, 2026
Dinamani Tiruvallur
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Tiruvallur
தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு
முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Dinamani Tiruvallur
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Tiruvallur
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Listen
Translate
Change font size

