Facebook Pixel அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் | Dinamani Tiruvallur - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான்

Dinamani Tiruvallur

|

June 25, 2025

கடந்த 12 நாள்களாக நடைபெற்று வந்த மோதலை முடித்துக் கொள்ள இஸ்ரேலும், ஈரானும் ஒரு வழியாக ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் மீது இஸ்ரேலும், இஸ்ரேல் மீது ஈரானும், இரு நாடுகளையும் சேர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் குற்றம் சாட்டி வரும் சூழலில், போர் முடிவுக்கு வருமா, அல்லது நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அப்படியே மோதல் முடிவுக்கு வந்து அமைதி ஏற்பட்டால், அதன் பிறகு இந்தப் போரில் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி என்று எழுகிற கேள்வியை யாரும் தவிர்க்க முடியாது. சொல்லப்போனால், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 13-ஆம் தேதி தொடங்கி, அமெரிக்காவும் கடந்த 22-ஆம் தேதி இணைந்துகொண்ட இந்த மோதலில் தங்களுக்குத்தான் வெற்றி என்று அந்த மூன்று நாடுகளுமே மார்தட்டி வருகின்றன.

ஈரான் அணுசக்தி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த அமெரிக்கா, எதிர்பாராத விதமாக தனது அதிநவீன பி-2 விமானங்கள் மூலம் பிரத்யேக சுரங்கத் தகர்ப்பு குண்டுகள் மூலம் ஈரானின் நிலத்தடி யுரேனியம் செறிவூட்டல் மையம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தின. அதற்குப் பிறகு, அந்த அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் இதன் மூலம் உலகில் அமைதியை ஏற்படுத்திவிட்டதாகவும் டிரம்ப் பெருமிதம் பேசினார்.

அந்தத் தாக்குதலுக்குப் பிறகு தான் இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதால் அது தங்களது தலையீட்டுக்குக் கிடைத்த வெற்றியாக அமெரிக்கா கருதுகிறது. இஸ்ரேலைப் பொருத்தவரை, ஈரானின் அணு விஞ்ஞானிகளையும் முக்கிய தளபதிகளையும் படுகொலை செய்திருக்கிறது; அணுசக்தி மையங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது; ஏவுகணை ஏவுதளங்கள் உள்ளிட்ட ராணுவ நிலைகளையும் கணிசமாக அழித்திருக்கிறது.

அதே நேரம், ஈரான் சரமாரியாக வீசிய ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை இடைமறித்து அழித்துள்ளதுடன், பெரிய அளவில் உயிரிழப்பையும் இஸ்ரேல் தவிர்த்திருக்கிறது. இதுமட்டுமின்றி, தங்களுக்காக ஈரான் மீது அமெரிக்காவை தாக்குதல் நடத்த வைத்துள்ளது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மிகப் பெரிய வெற்றியாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் இது அவருக்குக் கைகொடுக்கக் கூடும்.

MEER VERHALEN VAN Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தமிழகத்தில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

June 16, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அகல் சுடரும் அறப்பயணமும்...

வ றுமையும் சமூகப் புறக்கணிப்பும் சூழ்ந்த எளிய பின்னணியில் பிறந் தபோதும், நிலமற்ற ஏழைகளின் வாழ் வில் நம்பிக்கை ஒளியேற்றிய கிருஷ்ணம் மாள் ஜெகந்நாதன், காந்திய வழியிலேயே வாழ்ந்து வருபவர்.

time to read

3 mins

June 16, 2026

Dinamani Tiruvallur

உண்மைத் தொண்டர்களை எதிரியாகப் பார்க்கிறது அதிமுக தலைமை

அதிமுகவில் உழைக்கும் உண்மைத் தொண்டர்களை கட்சித் தலைமை எதிரிகளாகப் பார்ப்பதாக அந்தக் கட்சியின் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tiruvallur

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி.சண்முகமே காரணம்

அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

time to read

1 min

June 16, 2026

Dinamani Tiruvallur

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி

ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

time to read

2 mins

June 16, 2026

Dinamani Tiruvallur

கடந்த 4 நாள்களில் தங்கம் பவுன் ரூ.4,560 உயர்வு

ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையானது. இதன்மூலம் கடந்த 4 நாள்களில் பவுனுக்கு ரூ.4,560 உயர்ந்துள்ளது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிராக அதிமுக வழக்கு

4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கவும் கோரிக்கை

time to read

1 mins

June 16, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல்: பொறியாளர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை லாரி மீது கார் மோதியதில் பொறியாளர்கள் 2 பேர் உள்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

time to read

1 min

June 16, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

பொதுமக்கள் சாலை மறியல்; வட மாநில இளைஞர் கைது

time to read

1 mins

June 16, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்த பிரிட்டன்

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷிய எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தது. இதன்மூலம், இத்தகைய நடவடிக்கையில் முதல் முறையாக ஈடுபட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size