Facebook Pixel தேவை... சூழலுக்கேற்ற சீர்திருத்தம்! | Dinamani Tiruvallur - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

தேவை... சூழலுக்கேற்ற சீர்திருத்தம்!

Dinamani Tiruvallur

|

April 01, 2025

காவல் துறையில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு சட்டம் ஒழுங்கைப் பேணிக் காக்க தொடர்ந்து உழைக்கிறார்கள். அவர்களுக்கு சரியான கால இடைவெளிகளில் பதவி உயர்வு மற்றும் ஏனைய பணி சார்ந்த பயன்கள் மற்றும் அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.

- கட்டுரையாளர்: கல்வியாளர்.

சமூகத்தில் குற்றச் செயல்கள் புரிபவர்களை உரிய வகையில் அறிவுறுத்தியும் கண்டித்தும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தும் பொது அமைதியைப் பேண பெரிதும் துணை நிற்பவர்கள் காவல் துறையினர். துணிச்சலும், நேர்மையும், கருணையும் கொண்ட பலர் தமிழ்நாடு காவல் துறையில் இருக்கவே செய்கின்றனர். பேரிடர் நேரங்களிலும் பெருந்தொற்றுக் காலங்களிலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடமையாற்றியவர்கள் நம் காவல் துறையினர். இப்படியாகப் பல பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட தமிழ்நாடு காவல் துறைக்கு இது ஒரு நெருக்கடியான காலம்.

பள்ளி, கல்லூரிகளில் அதிகரித்து வரும் போதைப் பொருள்களின் நடமாட்டம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி நிகழும் பொருளாதார மோசடிகள் உள்ளிட்ட கண்காணிப்புகளைக் கடந்த குற்றச்செயல்கள் பெருகிவருகின்றன. காவல் துறை மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்கின்ற இத்தகைய நிகழ்வுகள் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்தெறியப்பட வேண்டும்.

சமீபத்தில் கோயம்புத்தூரில் காவல் துறையின் தலைவர் ஒருவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இன்னும் ஒரு மாதத்துக்குள் பள்ளிகளில் போதைப்பொருள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்பதுதான் அந்த அறிக்கை. இது பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. சமூக அக்கறை கொண்டவர்களுக்கு இது மனதை உலுக்கும் செய்தி. கிராமப்புறங்களில் தொடங்கி பெருநகரங்கள் வரை போதைப் பொருள்கள் விற்பனை கொடிகட்டிப் பறக்கின்றது.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 45 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 66 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கமான ஹெராயின், எல்எஸ்டி ஸ்டாம்ப், மெத்தம்பெட்டமின், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றோடு தற்போது அதிகம் தீங்கிழைக்கும் சிந்தட்டிக் என்ற வேதிப் போதைப் பொருள் புழக்கமும் அதிகரித்துவிட்டது. இதன் பரிமாற்றத்துக்கு சமூக ஊடகங்களும், கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களும் சமூக விரோதச் செயலில் ஈடுபடுபவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தற்போது தமிழ்நாடு அரசும் காவல் துறைத் தலைவரும் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள செய்திகளைக் காண்கிறோம்.

MEER VERHALEN VAN Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

உத்தவ் கட்சியில் பிளவு?; எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சியின் மக்களவை எம்.பி.க்களில் 7 பேர் தனி அணியாக பிரிந்து, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

time to read

1 mins

June 18, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

June 18, 2026

Dinamani Tiruvallur

இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடக்கம்

தமிழகத்தில் இடதுசாரி அரசியலை வலுப்படுத்தவும், மக்கள் சார்ந்த கோரிக்கைகளை ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுக்கவும் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடங்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvallur

புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!

அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

June 18, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது

அமைச்சர் பெ. விஸ்வநாதன்

time to read

2 mins

June 18, 2026

Dinamani Tiruvallur

கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvallur

ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

முதல்வர் விஜய், உதயநிதி, தமிழிசைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை விசாரணை நடத்தக் கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 mins

June 18, 2026

Dinamani Tiruvallur

ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி

தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

டிஎன்பிஎல்: 8 அணிகளில் 103 வீரர்கள் தக்கவைப்பு

தமிழ்நாடு பிரீ மியர் லீக் (டிஎன்பிஎஸ்) கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசனை யொட்டி, 8 அணிகள் தக்க வைத் துள்ள 103 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

June 17, 2026

Translate

Share

-
+

Change font size