Poging GOUD - Vrij
மகளிர், மாணவர்களுக்கு புதிய திட்டங்கள்
Dinamani Tiruvallur
|March 15, 2025
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
-
சென்னை, மார்ச் 14: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
வரும் நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:
மகளிர், மாணவருக்கான திட்டங்கள்: சமூகத்தில் மட்டுமன்றி, அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்வது அவசியம். அந்த வகையில், ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகளும் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக்கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். இந்தத் திட்டம் வரும் ஏப். 1 முதல் நடைமுறைக்கு வரும்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உருவாக்கிடும் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக்கடன் பெற்று மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்க வழி ஏற்படும். இதற்காக அவர்களுக்கு உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகள் வழங்கப்படும். வரும் நிதியாண்டில் இந்தத் திட்டத்திற்கான மானிய நிதியுதவியாக ரூ.225 கோடி ஒதுக்கப்படும்.
மீண்டும் கணினி: தமிழ்நாட்டின் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் பயின்று வரும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும்.
Dit verhaal komt uit de March 15, 2025-editie van Dinamani Tiruvallur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
தேர்வு கண்காணிப்பு பணிக்குச் சென்ற இடத்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்தவர் முதல்வர் ஜோசப் விஜய் !
கட்சியைத் தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்த பெருமைக்குரியவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் என தமிழக வனத் துறை அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
1 mins
June 22, 2026
Dinamani Tiruvallur
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
டிசம்பரில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுப்பம்: பியூஷ் கோயல்
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு டிசம்பரில் கையொப்பமாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்
சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.
2 mins
June 22, 2026
Dinamani Tiruvallur
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 22, 2026
Dinamani Tiruvallur
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!
'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.
1 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்
நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.
2 mins
June 21, 2026
Dinamani Tiruvallur
அழகான குதிரைகள் 5
வாகனப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில் குதிரைவண்டிகளின் பயன்பாடு அதிகமிருந்தது.
1 mins
June 21, 2026
Translate
Change font size
