Poging GOUD - Vrij
பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!
Dinamani Tirunelveli
|October 12, 2025
காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:
பனை மரத்தின் பாதுகாப்பு இப்போது எப்படி இருக்கிறது?
தமிழ்நாட்டு மாநில மரம் பனை. இதற்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக பனை மரம் வெட்டப்பட்டது. ஆனால், தமிழக அரசு பனை மரத்தைப் பாதுகாக்க ஓர் உத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு அடிப்படையில், இனி யாரும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியில்லாமல் பனை மரத்தை வெட்ட முடியாது. இது போன்ற உத்தரவு புதுவையிலும் பிறப்பிக்க வேண்டும். இப்போது பனைக்குப் பாதுகாப்பு வந்துவிட்டது.பனை மரம் ஏறுவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகத் தெரிகிறதே?
பனை மரம் ஏறுவோர்தான் பனை மரத்தைப் பாதுகாத்து வந்தனர். பனை ஓலைகளைக் கழித்து விடுதல் போன்ற பணிகளைச் செய்து வந்தனர். தமிழகத்தில் கள் இறக்க அனுமதியில்லாத நிலையில், பனை மரம் ஏறுவோர் வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். பழக்கம் இருந்தால் மட்டும்தான் பனை மரம் ஏற முடியும். டாஸ்மாக் வந்து விட்டதால் இப்போது பனை மரம் இந்தப் பயன்பாட்டுக்கு இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது.எத்தனை ஆண்டாக பனை விதைகளை நட்டு வருகிறீர்கள்?
இளைஞர்கள் ஒன்று திரண்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம் நம் பாரம்பரியத்தை மீட்கும் எண்ணம் கொண்டது. அதைப் போன்றதுதான் பனையின் பாரம்பரியத்தை மீட்பதும். அதற்காகத்தான் 2015 முதல் பனை விதைகளை நட்டு வருகிறேன். கடலோரப் பகுதிகள், குளக்கரைகள், ஏரிக்கரைகள், சாலையோரங்களைத் தேர்ந்தெடுத்து பனை விதைகளை நடவு செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 4.5 லட்சம் பனை விதைகளை நடவு செய்துள்ளோம். இதில் சுமார் 2 லட்சம் பனைகள் பிழைத்துக் கொண்டன. இப்போது அவை ஓரடி, இரண்டு, மூன்றடி வரை வளர்ந்துள்ளன.Dit verhaal komt uit de October 12, 2025-editie van Dinamani Tirunelveli.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை இல்லை
மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம், பேரவைத் தலைவர், சட்டப்பேரவை செயலர், ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் பதிலளிக்க உத்தரவிட்டது.
1 min
June 18, 2026
Dinamani Tirunelveli
குஜராத்தில் விமானத் தயாரிப்பு ஆலை: அதானி, எம்பிரேயர் நிறுவனங்கள் இறுதி
பிரேஸிலின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான எம்ப்ரேயரும் அதானி குழுமமும் இணைந்து, இந்தியாவில் பிராந்திய போக்குவரத்து விமானங்களுக்கான இறுதி ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை குஜராத்தின் தோலேராவில் அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
June 18, 2026
Dinamani Tirunelveli
முதல்வருடன் வைகோ சந்திப்பு
முதல்வர் ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
1 min
June 18, 2026
Dinamani Tirunelveli
ஐ.நா. பொதுச் செயலாளர் ஹைட்டி பயணம்
ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி நாட்டில் கள நிலவரத்தை அறிய ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ குட்டெரெஸ் (படம்) அந்நாட்டுக்குப் பயணித்தார்.
1 min
June 18, 2026
Dinamani Tirunelveli
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிதித் துறை
உலகின் மிக முக்கியமான எண்ம (டிஜிட்டல்) மாற்றங்களில் ஒன்றை இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
3 mins
June 18, 2026
Dinamani Tirunelveli
'ஏ' அணிகள் ஒருநாள் தொடர்: இறுதி ஆட்டத்தில் இந்தியா
'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில், இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Tirunelveli
போக்குவரத்துக் கழக மேம்பாட்டுக்கு குறுகிய, நடுத்தர, நீண்டகாலத் திட்டம்
முதல்வர் விஜய் ஆய்வு
1 min
June 18, 2026
Dinamani Tirunelveli
நிகழாண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்
பிரதமரைச் சந்தித்த பின் உர்சுலா வான்டர் லெயன் அறிவிப்பு
1 mins
June 18, 2026
Dinamani Tirunelveli
தமிழக காவல் துறையில் 30 டிஎஸ்பிக்கள் மாற்றம்
தமிழக காவல் துறையில் 30 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
June 18, 2026
Dinamani Tirunelveli
இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு
தங்கம் விலையுயர்வு மற்றும் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 2.49 சதவீதம் சரிந்து, 204.78 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min
June 18, 2026
Translate
Change font size

