Poging GOUD - Vrij
சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்!
Dinamani Tiruchy
|November 22, 2025
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நீர்ம மருந்துகள் (சிரப்) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உலக சுகாதார மையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருந்தது. அதன் பின்பும் உலக சுகாதார மையம் உலக நாடுகள் தங்களிடம் இந்த மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.
2022-ஆம் ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானிலும், 2023-ஆம் ஆண்டு கேமரூன் நாட்டிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதால் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகளின் மரணங்களும் நீர்ம மருந்துகளில் கண்டறியப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட மாசுகளும் இந்திய மருந்து தயாரிப்பு ஒழுங்குமுறை கண்காணிப்பில் தீவிர குறைபாடு இருப்பதையே காட்டுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
டைஎத்திலின் கிளைகோலின் நச்சுத்தன்மை விளைவுகள் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாத நிலையில், அதை உட்கொண்டதாகக் கருதப்படும் நோயாளிகளுக்கான நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் சவாலாக உள்ளன. இதனால், சிகிச்சை அளிப்பதிலும் நச்சுக்கான மாற்று மருந்து வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது. அறியாமையையும் அக்கறையின்மையையும் அகற்றி டைஎத்திலின் கிளைகோல் நச்சுத்தன்மை பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள் குறித்த விழிப்புணர்வை மருத்துவர்களுக்கு ஏற்படுத்துவது அரசின் கடமை. இதற்கு மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பை உடனடியாக வலுப்படுத்துவது அவசியம்.
இந்தியாவின் மருந்துச் சந்தையில் சில நிறுவனங்கள் ஒப்பந்த உற்பத்தி நடைமுறையின் கீழ் உற்பத்திச் செலவைக் குறைக்கும் வகையில், மலிவான நச்சுத்தன்மையுள்ள கரப்பான், கரை திரவங்கள், பொதி பொருள்கள் போன்ற மாற்றுகளைப் பயன்படுத்துகின்றன.
Dit verhaal komt uit de November 22, 2025-editie van Dinamani Tiruchy.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruchy
Dinamani Tiruchy
பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவர்கள் விண்ணப்பம்
தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பப் பதிவுக்கு இதுவரை 89,629 மாணவர்கள் இணையவழியாகப் பதிவு செய்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்கக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
முதல்வர் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!
காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
2 mins
May 11, 2026
Dinamani Tiruchy
மும்பைக்கு எதிராக 'த்ரில்' வெற்றி: முதலிடத்துக்கு வந்தது பெங்களூரு
ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவர் தேர்வு
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த க்யூ. மணிவண்ணன் என்ற மூன்றாம் பாலினத்தவர் தேர்வு செய்யப்பட்டார்.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
மாற்றத்துக்கு தயாராகும் தமிழக காவல் துறை
தவெக தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், தமிழக காவல் துறை மாற்றத்துக்கு தயாராகி யுள்ளது.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 11, 2026
Dinamani Tiruchy
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோட்ராணி வெற்றி
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ராணி சக வீரர் அபய் சிங்கை 5 கேம்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
1 min
May 10, 2026
Listen
Translate
Change font size
