Facebook Pixel இங்கிலாந்து தொடரும்... இனிவரும் நட்சத்திரங்களும்... | Dinamani Tiruchy - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

இங்கிலாந்து தொடரும்... இனிவரும் நட்சத்திரங்களும்...

Dinamani Tiruchy

|

August 06, 2025

விறுவிறுப்பாக நடைபெற்ற களம் கண்ட இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு தொடரை சமன் செய்வது என்பது, அவ்வளவாக அனுபவம் இல்லாத வீரர்களுடன், புதிய தலைமையின் கீழ் விளையாடிய இந்தியாவுக்கு எளிதானதல்ல.

- -நாதன் நடராஜன்

கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர், பரபரப்பாக நிறைவடைந்திருக்கிறது. இந்தியாவும், இங்கிலாந்தும் தலா 2 வெற்றிகளைப் பகிர்ந்துகொள்ள, ஒரு ஆட்டம் சமன் ஆனதால், தொடரும் சமனில் முடிவடைந்தது.

இந்தத் தொடரை வெற்றியுடன் இங்கிலாந்து தொடங்க, அடுத்த ஆட்டத்திலேயே இந்தியா அபார வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. விட்டுக்கொடுக்காத இங்கிலாந்து 3-ஆவது ஆட்டத்தில் வெல்ல, போராடிய இந்தியா 4-ஆவது ஆட்டத்தில் டிரா செய்தது. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற முன்னிலையுடன் வசதியாக கடைசி ஆட்டத்துக்கு வந்தது.

தொடர் கைநழுவிச் சென்று விட்டபோதும், வெற்றிக் கோப்பையை இங்கிலாந்துக்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லாத இந்தியா, விடாப்பிடியாக விளையாடி கடைசி ஆட்டத்தில் வென்றிருக்கிறது. தொடரையும் சமன் செய்திருக்கிறது.

தி ஓவல் டெஸ்ட் முடிவை மட்டும் பார்த்தவர்களுக்கு இந்தியா தொடரையே வென்றுவிட்டதைப் போன்ற சூழல் தென்படலாம். ஆனால் இந்தச் சமன், சாதாரணமானது அல்ல.

வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி, நம்பகமான பௌலர் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற அனுபவசாலிகள் இல்லாத நிலையில், பிரதான பௌலரான ஜஸ்பிரீத் பும்ரா பகுதியளவே பங்களித்த சூழலில் இளம் வீரர்களுடன் புதிய கேப்டன் தலைமையில் இந்தியா இந்தத் தொடரை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் தரையிறங்கிய போது, ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி மீது அவ்வளவாக எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால் சுமார் ஒன்றரை மாதங்கள் நடைபெற்ற இந்த 5 டெஸ்ட்டுகளின் முடிவில், அடுத்த தலைமுறை இந்திய அணி, தனது புதிய பயணத்துக்குத் தயாராகிவிட்டது தெளிவாகத் தெரிகிறது.

பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் - கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூட்டணியின் 'பாஸ்பால்' எனப்படும் அதிரடி ஆட்ட உத்தியுடன்

MEER VERHALEN VAN Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Tiruchy

உலக கோப்பை குத்துச்சண்டை: பலமான இந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ்-2) போட்டிக்கு பலமான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tiruchy

தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்

time to read

1 mins

June 07, 2026

Dinamani Tiruchy

அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது

பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.

time to read

1 mins

June 07, 2026

Dinamani Tiruchy

டபிள்யுடிஆர் செஸ்: வைஷாலி சாம்பியன்

நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சிறிது நேரத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற டபிள்யுடிஆர் மகளிர் செஸ்டூர் போட்டியில் அவரது சகோதரி வைஷாலி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஆட்சியையும் பிடிக்கலாம்

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.

time to read

1 mins

June 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

June 07, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

June 07, 2026

Translate

Share

-
+

Change font size