Poging GOUD - Vrij

மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்?

Dinamani Tiruchy

|

July 28, 2025

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த வணிகப் பெரு நிறுவனங்கள் உலகில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாக மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன, தங்களது தொழில்நுட்பங்களால்தான் உலகில் பசியை நீக்க முடியும் என்று நம்ப வைக்கின்றன.

- அறச்சலூர் இரா.செல்வம்

ஜெப்ரி ஸ்மித் நிறைய கள ஆய்வுகளுக்குப் பிறகு 2004-இல் எழுதிய 'சீட்ஸ் ஆப் டெசெப்சன்' என்ற மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தின் அறியப்படாத, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிய நூல் அமெரிக்கர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நூலுக்கு 'தி நெக்ஸ்ட் டயர் பார் ஸ்மால் பிளானெட்' என்ற உணவு அரசியல் குறித்து ஆழமான நூலை எழுதிய பிரான்செஸ் மூரே லேப்பி என்ற அணிந்துரை எழுதியிருந்தார்.

மரபணு மாற்று விதைகள் ஜனநாயகத்தை என்ன செய்திட முடியும்? இப்படியொரு கேள்வியோடு தனது அணிந்துரையைத் தொடங்கியிருந்தார். கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லாத கேள்வியைப் போல இது நமக்குத் தோன்றும். இதற்கு அவர் கூறிய பதில், மரபணு மாற்று விதைகள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பது; அந்த நூலின் பெரும் பகுதி, மரபணு மாற்று உயிரினங்களுக்காக நடந்தவை, நடப்பவை, எந்த அளவுக்கு மரபணு மாற்று விதைகளுக்காக நம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தது.

55 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்களைத் தீவனமாக்கி, இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கும் முறை வந்த போது, அது ஒரு ஆபத்தின் அடையாளம் என்று எழுதினேன். இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பதில் என்ன ஆபத்து இருக்க முடியும்? இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பது பற்றி அறியும்போதுதான் அந்த ஆபத்து புரியும்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்ப்பும், மாட்டிறைச்சி உற்பத்தியும் பெருந்தொழில் வணிகமானது. மாடுகளுக்குத் தேவைப்படும் தீவன மக்காச்சோளத்தை விளைவிப்பது தொடங்கி, உணவாக மக்களின் இல்லங்களுக்குச் செல்லும் வரை பல்வேறு படிகள் உள்ளன. அவற்றை அரசு அமைப்புகள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள், ஒழுங்காற்று அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகளை வடிவமைத்ததில் அந்தப் பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும்பங்காற்றின. இதைத்தான் ஆபத்தின் அடையாளம் என்கிறார் அவர்.

மேலும், அவை வணிகத்தை அதிகப்படுத்துவதற்காக மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தன. காடுகளை அழித்துத் தீவனத்தை வளர்த்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தது. மாடு வேகமாக அதிகச் சதைப் பிடிப்புடன் வளர ஹார்மோன்கள் தந்தது, ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியது. மக்களுக்கு இதய நோயை அதிகமாக்கியது, இன்னும் பல பாதிப்புகளை எல்லாம் உருவாக்கியது என்கிறார் அவர்.

MEER VERHALEN VAN Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தேசிய கூடைப்பந்து: ரயில்வேக்கு இரட்டை பட்டம்

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் இந்திய ரயில்வே இரட்டை சாம்பியன் பட்டம் வென்றது.

time to read

1 min

January 12, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தாமதமாகும் 'ஜனநாயகன்' - பின்புலம் என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜனவரி 9-ஆம் தேதி வெளி வரவேண்டிய நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' தணிக்கைக் குழுவினரின் தாமதத்தால் வெளிவராமல் போனது பரவலான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

time to read

3 mins

January 12, 2026

Dinamani Tiruchy

ஸ்விட்டோலினா சாம்பியன்

ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைனின் எலனா ஸ்விட்டோலினா சாம்பியன் பட்டம் வென்றார்.

time to read

1 min

January 12, 2026

Dinamani Tiruchy

எழுந்திடு, விழித்திடு, உழைத்திடு...

இன்று பாரதத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷாரை விரட்டியது 'வெள்ளையனே வெளியேறு' என்ற 'குயிட் இந்தியா' இயக்கம்.

time to read

2 mins

January 12, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயம்

எம்ஆர்எஃப் எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ தேசிய மோட்டார் சைக்கிள் கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெகதிஸ்ரீ குமரேசன், ரஹில், சூர்யா, ராஜ் குமார் சிறப்பிடம் பெற்றனர்.

time to read

1 min

January 12, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

சபலென்கா, மெத்வதேவ் சாம்பியன்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் அரினா சபலென்காவும், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவும் பட்டம் வென்றனர்.

time to read

1 min

January 12, 2026

Dinamani Tiruchy

இளைஞர்களின் துறவி!

ஸ்ரீ அரவிந்தர் விவேகானந்தரைத் தம் குரு எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

time to read

3 mins

January 12, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

அயன்மேன் டிரையத்லான்: இந்திய அணியினர் சிறப்பிடம்

சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் தூர டிரையத்லான் நிகழ்வான, 'அயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை' போட்டியில் இந்திய அணியினர் சிறப்பிடம் பெற்றனர்.

time to read

1 min

January 12, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

கோலி அதிரடியில் இந்தியா வெற்றி

வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

time to read

1 min

January 12, 2026

Dinamani Tiruchy

சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

time to read

1 min

January 12, 2026

Translate

Share

-
+

Change font size