Poging GOUD - Vrij

என்று முடியும் இந்த 'ரீல்ஸ்' மோகம்?

Dinamani Tiruchy

|

July 17, 2025

இருபொருள் தொனிக்கும் ஆபாச உரையாடல்களும், பொதுவெளியில் பேசத் தயங்கும், பேசவே முடியாத அருவெறுக்கத்தக்க சொல்லாடல்களைக் கூச்சமின்றி அப்பட்டமாக அப்படியே பதிவிடும் அநாகரிகமும் விநாடிக்கு விநாடி பெருகி வருகின்றன.

- கிருங்கை சேதுபதி

இரவு, பகல் பாராமல், ஏன் இரவு பகல் வேறுபாடுகள்கூடத் தெரியாமல் கைப்பேசிக்குள் கண் புதைத்து வாழ்வோர் பெருகிய காலமாக மாறி வருகிறது. அதிலும், அண்மைக்காலமாக, சிறியோர் முதல் பெரியோர் வரை, 'ரீல்ஸ்' மோகத்திற்கு உள்ளாகி, அடிமையாகி வருகிறார்கள்.

தன்னைத் தலைவனாக முன்னிறுத்திக் கொண்டு 'தற்படம்' ஆகிய நிலைப்படத்தை (ஸ்டில்) எடுத்து வெளியிட்ட காலம்போய், தன்னையே தலைமைப் பாத்திரமாகக் கொண்டு, தான் செய்யும் அரிய சாதனையை (?) உலகறியச் செய்யும் தொடர்படமாக, கைப்பேசி வழி எடுத்து, அதன்வழி கிடைக்கும் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வெளியிடும் படக்காட்சியே 'ரீல்ஸ்'.

அது பரவலாகிப் பலரும் பார்க்கப்படுவதை, 'வைரலாகிறது' என்கிறார்கள். பார்ப்பதும் ரசிப்பதும், மீள் பதிவிடுவதும் ஆகி, 'வைரஸ்' நோய்போல் பரவி வரும் இப் பற்றுநோய், புற்றுநோய்போல் பலரைத் தன்வயப்படுத்தி வருகிறது.

ஆண், பெண் பேதமில்லாமல், வயது வேறுபாடின்றி, எதையும் எப்போதும் பதிவாக்குவதும், உடன் பதிவிடுவதும், அது எத்தனை பேரால் பார்க்கப்படுகிறது, விருப்பம் (லைக்ஸ்) தெரிவிக்கப்படுகிறது, என்னென்ன பதிலிகள் (கமென்ட்ஸ்) வருகின்றன என்று பார்ப்பதிலுமே பலரது உயிரான பொழுதுகள் விரயமாகின்றன.

அதைவிடவும், 'ரீல்ஸை' படமாக்கிய படியே நேரடியாக (லைவ் ஆக) பதிவிடுகிறவர்கள் சாகசம் என்கிற பெயரில் பைத்தியக்காரத்தனமான செயல்களில் வெறித்தனமாக ஈடுபட்டு, தனக்கும் பிறர்க்கும் கேடு விளைவிக்கிறார்கள்; உயிரிழக்கும் ஆபத்துக்கும் உள்ளாகிறார்கள்.

நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் திரைக்காட்சியில் இடம்பெறுவதுபோல் சாகசம் நிகழ்த்தி நேரடிப் படமாக்கி ஒளிபரப்ப விழைவதையும், அவ்வாறு படமாக்கிவரும்போதே விபத்தில் சிக்கி உயிரிழப்பதையும் காண முடிகிறது.

MEER VERHALEN VAN Dinamani Tiruchy

Dinamani Tiruchy

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Tiruchy

பாஜக தேசியத் தலைவராகிறார் நிதின் நவீன்!

பாஜக தேசிய செயல் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவரும் அக்கட்சியின் உயரிய பொறுப்பை வகிக்கும் இளம் தலைவராகவும் அறியப்படும் நிதின் நவீன் (45), இம்மாத இறுதியில் பாஜக தேசியத் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Tiruchy

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Tiruchy

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Tiruchy

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Tiruchy

வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Tiruchy

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Tiruchy

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

திண்டுக்கல்லில் தம்பதி வெட்டிக் கொலை

திண்டுக்கல்லில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலைக்குப் பழிக்குப் பழியாக பிணையில் வெளியே வந்தவரும், அவரது மனைவியும் வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Tiruchy

தில்லியில் அமித் ஷாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் வியாழக்கிழமை இரவு சந்தித்தார்.

time to read

1 min

January 09, 2026

Translate

Share

-
+

Change font size