Poging GOUD - Vrij
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
Dinamani Thanjavur
|May 12, 2026
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
அவரது முகம் சோர்ந்து இருந்தது. வந்து ஐந்து நிமிஷங்கள்வரை அவர் எதுவும் பேசவில்லை. எப்போது வேண்டுமானாலும் உடைந்து அழுதுவிடுவார் போல இருந்தார். நான் காரணம் கேட்டபோது, தன்னை வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள் என்று கூறினார். அந்த இளைஞர் ஒரு முதுநிலைப் பட்டதாரி. அரசுத் துறையில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். அந்த வேலை நிரந்தரமானது அல்ல. அது தற்காலிகம் என்று அவருக்குத் தெரியும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பணி நீட்டிப்பு ஆணை கொடுப்பார்கள்.தற்போது வெளிப்பணி ஒப்படைப்பில் (அவுட் சோர்ஸிங்) அந்தத் துறையைக் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் முதல் நாள் அவரை அழைத்து 'நாளையிலிருந்து நீ வேலைக்கு வர வேண்டாம்' என்று கூறி நிறுத்திவிட்டார்கள். குறைந்தபட்சம் ஒரு மாத அவகாசமாவது கொடுத்திருந்தால் அந்த இளைஞர் வேறு வேலைக்கு முயற்சி செய்யத் தொடங்கி இருப்பார். தினக்கூலி கணக்காக சட்டென்று வெளியே தள்ளுவது மாதிரி ஆகியிருக்கிறது.
இதில் உச்சபட்ச கொடுமை என்னவென்றால், அவரே தன் சுய விருப்பத்துடன் அந்த வேலையை விட்டுப் போவதாக எழுதி வாங்கிக் கொண்டார்கள். வேலை இழப்பு என்பது வெறும் பொருளாதார பிரச்னை மட்டுமல்ல, எதிர்காலம் குறித்த அச்சத்தையும் உருவாக்குகிறது. குறிப்பாக, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இது பெரும் பிரச்னையாக இருக்கிறது. வேலை வாய்ப்புச் சந்தையில் இன்று வெளிப்பணி ஒப்படைப்பு என்பது தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது.
செலவுக் குறைப்பு என்ற பெயரில் தற்போது நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகள் இளைஞர்களை வெளியேற்றுகின்றன. இன்றைய நவீன உலகில், வெளிப்பணி ஒப்படைப்பு என்பது உலகளாவிய வர்த்தகத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது. ஆனால், அந்த முதுகெலும்பில் இன்று ஒரு சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் வழியே கசிவது நம் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த அச்சம்.
முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தால் அது நிரந்தரம் என்று இருந்தது. பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை அந்த ஒரே நிறுவனத்தில் பணிபுரிவார்கள். ஆனால், வெளிப்பணி ஒப்படைப்பு முறையில் இயங்கும் நிறுவனங்கள், உலகப் பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இயங்குகின்றன. அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ ஏற்படும் ஒரு சிறு பொருளாதார மாற்றம், இங்கே ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இளைஞரின் மடிக்கணினியை மூடச் செய்கிறது.
Dit verhaal komt uit de May 12, 2026-editie van Dinamani Thanjavur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Thanjavur
Dinamani Thanjavur
ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு 'கோல்டன் பீகாக்' விருது
வங்கிச் சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க 'கோல்டன் பீகாக்' விருது வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Thanjavur
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Thanjavur
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
வூஷூ உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 5 பதக்கம்
சீனாவில் நடைபெற்ற வூஷூ விளையாட்டின் சண்டா பிரிவுக்கான 11-ஆவது உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியினர் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றனர்.
1 min
May 16, 2026
Dinamani Thanjavur
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Thanjavur
ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
1 min
May 15, 2026
Listen
Translate
Change font size
