Poging GOUD - Vrij
உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?
Dinamani Salem
|January 08, 2026
தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.
இதன் மக்கள்தொகை 2.90 கோடி மட்டுமே. உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசுலா, தினமும் 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு கச்சா எண்ணெய்யின் விலை மிகக் குறைவு. மேலும், எசெக்விபோ பிராந்தியத்துக்குப் பக்கத்திலுள்ள கடல் பகுதியில் கச்சா எண்ணெய் வளம் இருப்பதை அமெரிக்காவின் ‘எக்ஸான்மொபில்' எனும் நிறுவனம் கண்டுபிடித்திருக்கிறது.அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், வெனிசுலா அதிபர் மடூரோவின் அரசை 'போதைப் பொருள் பயங்கரவாத அமைப்பாக' அறிவித்தார். மடூரோவும் போதைப் பொருள் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். மேலும், வெனிசுலாவுக்கு அருகே கரீபியன் கடலில் இதுவரை இல்லாத மிகப் பெரிய அளவில் படைகளைக் குவித்த டிரம்ப், கிழக்குப் பசிபிக் கடல் வழியாகச் செல்லும் கப்பல்களைத் தாக்கி அழிக்க உத்தரவிட்டார். அந்தப் படகுகளில் போதைப் பொருள்கள்தான் கடத்தி வரப்படுகின்றன என்பதற்கான உரிய ஆதாரங்களை வெளியிடாமல் அமெரிக்கா நடத்திய 35 தாக்குதல்களில் இதுவரை 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கை என்று உலக நாடுகள் விமர்சிக்கின்றன.
இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டி அதிபர் மடுரோவும், அவரது மனைவியும் அமெரிக்காவால் சிறை பிடிக்கப்பட்டது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்தது, சர்வதேச சட்டத்தை மீறிய செயல். இது இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் தலைவருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அபாயகரமான முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் உலக அமைதிக்கும், நிலைத்த தன்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Dit verhaal komt uit de January 08, 2026-editie van Dinamani Salem.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Salem
Dinamani Salem
4 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 16) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Salem
ஸ்வியாடெக்கை வெளியேற்றிய ஸ்விடோலினா
இறுதியில் கௌஃபுடன் இன்று பலப்பரீட்சை
1 min
May 16, 2026
Dinamani Salem
குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது
கடந்த சில மாதங்களாக தமிழர் நாம் அனைவரும் அரசியல் பற்றியே சிந்தித்தும், விவாதித்துக் கொண்டும் இருக்கிறோம். இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு அரசியல், புதிய அரசு என்றுதான் பேசப் போகிறோம்.
3 mins
May 16, 2026
Dinamani Salem
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Salem
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Dinamani Salem
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்
ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
1 min
May 16, 2026
Dinamani Salem
மோடி அரசின் தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்கும் நிலை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் விமர்சனம்
'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்த தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது' என்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.
1 min
May 16, 2026
Dinamani Salem
மதுரை மாநகராட்சி ஊழல்கள் விசாரிக்கப்பட வேண்டும்
கடந்த திமுக ஆட்சியின் போது மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் சி.டி. ஆர். நிர்மல்குமார் வலியுறுத்தினார்.
1 min
May 16, 2026
Dinamani Salem
மேற்காசிய அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி உறுதி
1 mins
May 16, 2026
Dinamani Salem
காங்கோ குடியரசில் எபோலா தொற்று பரவல்
65 பேர் உயிரிழப்பு
1 min
May 16, 2026
Listen
Translate
Change font size
