Facebook Pixel இந்தியாவின் அணுகுமுறை மாற்றம்..! | Dinamani Salem - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

இந்தியாவின் அணுகுமுறை மாற்றம்..!

Dinamani Salem

|

May 15, 2025

இனி பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் குறித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும்தான் இருக்குமே தவிர, வேறு எந்த விஷயம் குறித்தும் அந்த நாட்டுடன் பேசப்படாது என்று சர்வதேச சமூகத்துக்கு பிரதமர் மோடி திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.

- வேணு ராஜாமணி

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் தெளிவான மற்றும் உறுதியான மாற்றத்தை பிரதமர் மோடி முன்வைத்தார்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்திய ஆயுதப்படைகள் அண்மையில் நடத்திய துல்லியமான தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கடுமையான செய்தி தரப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கையை அவர் தெளித்தெளிவாக எடுத்துரைத்தார்.

இனி பயங்கரவாதத்தை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்பதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' புதிய அணுகுமுறையையும், கொள்கையையும் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கையை விளக்கிய அவர், அந்தக் கொள்கையின் மூன்று முக்கியக் கூறுகளை எடுத்துரைத்தார்.

இந்தியா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குத் தகுந்த பதிலடி அளிக்கப்படும்;பயங்கரவாதத்தின் வேர்கள் எங்கிருந்து முளைத்தாலும், அந்த இடங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது முதல் கூறாகும்.

எந்தவொரு அணு ஆயுத மிரட்டலையும் இந்தியா சகித்துக்கொள்ளாது; அணு ஆயுத அச்சுறுத்தல் என்ற போர்வையின் கீழ் உருவாகும் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது இந்தியா துல்லியமாகவும், தீர்க்கமாகவும் தாக்குதல் நடத்தும் என்பது இரண்டாவது கூறாகும்.

அரசின் நிதியுதவியைப் பெறும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதத்தின் காரணகர்த்தாக்களையும் வெவ்வேறாக இந்தியா வித்தியாசப்படுத்தி பார்க்காது என்பது மூன்றாவது கூறாகும். அதாவது, பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறை யான ஐ.எஸ்.ஐ., அரசு ஆகியவை ஒரே கண்ணோட்டத்தில்தான் இனிமேல் பார்க்கப்படும் என்பதுதான் பிரதமர் அளித்திருக்கும் செய்தி (எச்சரிக்கை).

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி, 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒரு சேர நடைபெற முடியாது', 'ரத்தமும் தண்ணீரும் சேர்ந்து பாயமுடியாது' என்றார்.

MEER VERHALEN VAN Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

பேரவையில் அனைவரும் சமம்

முதல்வர் விஜய்

time to read

1 mins

May 13, 2026

Dinamani Salem

கணவர், மாமனார் கொன்று எரிப்பு: ஆண் நண்பருடன் பெண் கைது

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரான கணவர், அவரது தந்தையை, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று எரித்ததாக பெண்ணை, அவரது நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

தொடர் சரிவுப் பாதையில் பங்குச் சந்தை!

உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் நீடிக்கும் மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்த வாரத்தின் 2-ஆம் வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் பலத்த சரிவைச் சந்தித்தது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

எதிரி கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்

எதிரி கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

May 13, 2026

Dinamani Salem

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Salem

Dinamani Salem

தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

time to read

1 min

May 13, 2026

Translate

Share

-
+

Change font size