Poging GOUD - Vrij
கூட்டணி ஆட்சியா? கூட்டணி அரசா?
Dinamani Puducherry
|July 09, 2025
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தேர்தல் வியூகம் வெற்றி பெறுமா என்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
பி.ஜெபலின் ஜான் சென்னை, ஜூலை 8: அதிமுகவின் மௌனமும் பாஜக மேலிடத்தின் நிலைப்பாடும் இந்த விவாதத்தைத் தொடர்ந்து பேசுபொருளாக்கி இருக்கிறது.
2024 மக்களவைத் தேர்தலில் முறிந்த அதிமுக-பாஜக கூட்டணி, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் கடந்த மார்ச் மாதத்தில் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு அமித் ஷா தனது 'எக்ஸ்' பக்கத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனப் பதிவிட்டார். ஆட்சி அமையும் என்று சொன்னாரே தவிர, அரசு அமையும் என்று சொல்லவில்லை. அதற்குள், அமித் ஷா 'கூட்டணி ஆட்சி' என்று அறிவித்துவிட்டார் என்று ஊடகங்களில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சென்னைக்கு வந்த அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசிய பிறகு அவருடன் சேர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
அடுத்த நாளே, அமித் ஷா கூறியது 'கூட்டணி ஆட்சிதான்', 'கூட்டணி அரசு அல்ல' என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். 2021-வரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அதிமுக அரசும்கூட தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருந்தது என்பதையும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலில்தான் அமித் ஷா சில நாளிதழ்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனத் தெரிவித்து, ஓயாத கூட்டணி ஆட்சி சர்ச்சைக்கு உயிர் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தில் இப்போதும் எடப்பாடி பழனிசாமியோ அவரது தரப்போ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாஜகவிலும் அதே நிலைதான்.
Dit verhaal komt uit de July 09, 2025-editie van Dinamani Puducherry.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Puducherry
Dinamani Puducherry
பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்
கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்
75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது
இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்
தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு
2 mins
January 07, 2026
Dinamani Puducherry
தேசியமும் தர்மமும் காக்க...
மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.
3 mins
January 07, 2026
Dinamani Puducherry
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்
புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
37% உயர்ந்த செயில் விற்பனை
அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Translate
Change font size
