Poging GOUD - Vrij
இஸ்ரேலுக்கு 20 இஸ்லாமிய நாடுகள் கண்டனம்
Dinamani New Delhi
|June 18, 2025
ஈரான் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்திவருவதாக 20 அரபு, இஸ்லாமிய, ஆப்பிரிக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
துபை, ஜூன் 17:
இது குறித்து அந்த நாடுகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈரானில் இஸ்ரேல் நடத்திவரும் முரட்டுத்தனமான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. சர்வதேச சட்டங்களுக்கும், ஐ.நா.வின் வழிகாட்டுதல்களுக்கும் எதிராக ஈரானின் அணுசக்தி மையங்களிலும், ராணுவ தளங்களிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இந்த தாக்குதல் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கெனவே பதற்றம் நிலவிவரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே, தாக்குதலைக் கைவிட்டு இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஈரானின் அணுசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதால் அணுக் கதிர் வீச்சு பரவும் அபாயம் உள்ளது. எனவே, அந்த மையங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே தடைபட்டுள்ள அணு சக்தி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும். இந்தப் பிரச்னைக்கு அமைதி முறையில் மட்டுமே தீர்வு காண முடியும்.
மத்திய கிழக்கு பிராந்தியம் அணு ஆயுதமற்ற பகுதியாக இருக்க வேண்டும் என்பதே அரபு நாடுகளின் நீண்டகால நிலைப்பாடு.
Dit verhaal komt uit de June 18, 2025-editie van Dinamani New Delhi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani New Delhi
Dinamani New Delhi
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
May 16, 2026
Dinamani New Delhi
பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க சிறப்புக் குழு
சிவகாசி பட்டாசு தொழிலாளர்களைப் பாதுகாக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
1 min
May 16, 2026
Dinamani New Delhi
ஸ்வியாடெக்கை வெளியேற்றிய ஸ்விடோலினா
இறுதியில் கௌஃபுடன் இன்று பலப்பரீட்சை
1 min
May 16, 2026
Dinamani New Delhi
அதிமுகவில் இரு பிரிவாக ஆலோசனை கூட்டம்
சென்னையில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் இரு பிரிவுகளாக தனித்தனியாக வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
1 min
May 16, 2026
Dinamani New Delhi
'நீட்' தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் குளறுபடி மிகுந்த 'நீட்' தேர்வு முறையை ரத்து செய்யக் கோரியும், சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்-க்கு பதவி நீட்டிப்பு வழங்கியதைக் கண்டித்தும் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
May 16, 2026
Dinamani New Delhi
ம.பி.: போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து அந்த மாநில உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
May 16, 2026
Dinamani New Delhi
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani New Delhi
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani New Delhi
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani New Delhi
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Translate
Change font size
