Facebook Pixel அதிகாரமே குறிக்கோள்! | Dinamani Madurai - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

அதிகாரமே குறிக்கோள்!

Dinamani Madurai

|

November 24, 2025

ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.

- கோதை ஜோதிலட்சுமி

அதிகாரமே குறிக்கோள்!

ஆரிய, திராவிட இனவாதம் பேசுவோர் அதில் எந்த ஆராய்ச்சியையும் செய்ததில்லை. பிரிட்டிஷார் நம்மைப் பிரித்தாள்வதற்காகப் பயன்படுத்திய சூழ்ச்சி, தங்களுக்கும் சாதகமாக இருப்பதால் இவர்களும் பயன்படுத்துகின்றனர். ஆரியர்-திராவிடர் என்ற இனங்கள் பாரத தேசத்தில் எந்த நாளிலும் இருக்கவில்லை என்று மேதைமை நிறைந்த அம்பேத்கர் தெளிவுபடுத்தினார். ஆனாலும், திராவிடர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதோடு தமிழர்கள் மீதும் அத்தகைய வண்ணத்தைப் பூசிவிடும் முயற்சியில் சிலர் ஈடுபடுகிறார்கள்.

திராவிடர்கள்- ஆரியர்கள் என்ற பாகுபாட்டை தமிழ் இலக்கியங்கள் சொல்லவில்லை. சங்க இலக்கியத்தில்கூட ஆரிய என்ற சொல் இடம்பெறுகிறதே அன்றி திராவிடர் என்ற சொல் இல்லை. தமிழ்நாட்டுக்கு வெளியில் இருக்கும் பிரதேசங்களைக் குறிப்பிட மொழி, பெயர், தேயம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர திராவிடர் என்ற சொல் கிடையாது.

தமிழ் தேசியவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோர் 'திராவிடம்' என்ற பாகுபாட்டை மறுக்கின்றனர்; தமிழர்களை திராவிடர் என்று அடையாளப்படுத்துவதை எதிர்க்கின்றனர். ஆனால், ஒரு சிலர் ஆரியர்கள் என்று ஒரு பிரிவினரை வசைபாடி அவர்கள் மீது வரலாற்றுப் பிழைகளை ஏற்றுவது போல், இவர்கள் தெலுங்கர்கள் மீது வெறுப்புணர்வை விதைக்கின்றனர்.

மொத்தத்தில் திராவிட அரசியலோ, தமிழ் தேசிய அரசியலோ தமிழர்களின் பெருமைகளை வளர்ச்சியை வரலாற்றை விட்டுவிட்டு ஒரு பிரிவினரைக் குற்றஞ்சாட்டி இந்திய ஒருமைப்பாட்டுக்கு விரோதமாகவே நடந்து கொள்கின்றன. வெறுப்பு அரசியலை மக்கள் மனங்களில் விதைத்து தங்களுக்கான வாக்குவங்கியை உறுதி செய்வதில் கவனமாக இருக்கின்றனர்.

MEER VERHALEN VAN Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

ஜோகோவிச் சாதனையை முறியடித்தார் சின்னர்

இத்தாலியன் ஓபன் களிமண் கள டென்னிஸ்போட்டியில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்

இந்தியா வலியுறுத்தல்

time to read

2 mins

May 15, 2026

Dinamani Madurai

தாலி பாக்கியம் தரும் தலம்!

தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கேரளத்தின் புதிய முதல்வர் வி.டி.சதீசன்

நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் அறிவிப்பு

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

காலிறுதியில் சிந்து, லக்ஷியா சென்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷியா சென் உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயர்வு

உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பலத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக அதிகரித்துள்ளது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

எம்பிபிஎஸ் அங்கீகாரம்: உறுதியளிப்பு சான்று அளிக்க அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கு வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபார்ம்) மருத்துவக் கல்லூரிகள் வரும் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

கேஜரிவால் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிட்டதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பாடக், சஞ்சய் சிங், சௌரவ் பரத்வாஜ் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா வியாழக்கிழமை தொடங்கினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு

மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 15, 2026

Listen

Translate

Share

-
+

Change font size