Poging GOUD - Vrij
திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முடியாது
Dinamani Karur
|August 17, 2025
திமுக கூட்டணி கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்த நினைக்கும் எதிர்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது; எங்களை மிரட்ட நினைத்தவர்கள் மிரண்டுபோயிருக்கிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
சேலம், ஆக. 16:
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-ஆவது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா, மாநிலச் செயலர் இரா. முத்தரசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கூட்டணியில் இருந்தாலும் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்க கம்யூனிஸ்டுகள் தவறியதில்லை. நாங்களும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம்.
தற்போதுகூட, 1950-இல் சேலம் மத்திய சிறையில் 22 கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் விதமாக நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என முத்தரசன் கோரிக்கை மனு அளித்தார். சேலத்தில் சிறை தியாகிகள் நினைவாக விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும். அதற்கான உத்தரவை வழங்கிவிட்டுதான் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன். அதற்கான பணிகள் நாளைமுதல் தொடங்கும்.
திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடைமை இயக்கத்துக்கும் இடையே இருப்பது கொள்கை நட்பு. சமூகத்துக்கு தேவையான கொள்கை வலுவாக இருப்பதால், நட்பும் வலுவாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்தின் இரு முகங்களாக திராவிட இயக்கங்களும், பொதுவுடமை இயக்கங்களும் உள்ளன.
கொள்கை உறவின் ஆழத்தை தலைமுறை கடந்தும் எடுத்துச் செல்ல வேண்டும். கொள்கை முரண்கள் எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது.
Dit verhaal komt uit de August 17, 2025-editie van Dinamani Karur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Karur
Dinamani Karur
சநாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்து: பாஜக விமர்சனம்
சநாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Karur
ஜெயிலர்-2 திரைப்பட படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
சென்னை அருகே பனையூரில் ஜெயிலர் -2 திரைப்பட படப்பிடிப்பின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
1 min
May 15, 2026
Dinamani Karur
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Karur
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Karur
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Karur
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Karur
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Karur
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Karur
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Karur
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Translate
Change font size
