Poging GOUD - Vrij
செல்வத்துப் பயனே ஈதல்!
Dinamani Erode & Ooty
|December 10, 2025
'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் வாழ்வியல் மொழி.
ஆனாலும், தாங்கள் தேடிய திரவியங்களை ஒருபோதும் தமிழர்கள் பதுக்கியதில்லை; தனக்கென்று மட்டும் வைத்துக் கொண்ட துமில்லை. அண்மைக்காலமாக அதாவது இந்திய விடுதலைக்குப் பின்னர் தமிழர் களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரியமாற்றம் சொத்துக்குவித்தல் என்னும் வழக்கம்; இது தமிழர்களின் மரபன்று.தேடித் தேடிப் பொருளைக் குவிப்ப தும் அவ்வாறு குவிந்தவற்றைக் கொண்டு மேலும் மேலும் அதைப் பெருக்குவதற் கான வழிகளில் ஈடுபடுவதும் குறிப்பாக மண்ணிலும் பொன்னிலும் அதை முதலீடு செய்வதும் இதுபோன்ற பல முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதும்தான் வாழ்க்கை யின் குறிக்கோள் என்று கருதிக் கொண்டி ருக்கிற காலமாக இருக்கிறது.
வாழ்வுக்கான அகப்பொருள் தேடிக் கண்டு தேர்ந்து உலகுக்கே உரக்கச் சொன்ன தமிழர்கள் தாங்களே அந்த மெய்ப் பொருளை மறந்துவிட்டுப்பொய்ப்பொருளை நாடி - புறவாழ்வுக்குப் பொருள் தேடி அலைகி றார்களோ என்ற ஐயமும் தோன்றுகிறது.
இதிலே வேடிக்கை என்னவென்றால், வேண்டுதல் வேண்டாமை இலானாகிய கடவுளையும் இதற்குப் பங்கு சேர்த்துக் கொள்வதுதான். இந்தக் கோயிலில் இத் தனை முறை இப்படி வேண்டிக் கொண் டால்செல்வம்கொட்டோகொட்டென்று கொட்டும் என்று வேண்டுகிறவர்கள் நம்பு கிறார்கள். அவ்வாறு வேண்டிச் செல்வத் தைச் சேர்த்தவர்கள் தாங்கள் சேர்த்த செல் வத்துக்குக் காரணம் அந்தக் கடவுள்தான் என்றும், ஏதும் பழி-பாவம் வந்து விடக் கூடாது என்பதற்காக அதில் ஒரு பங்கை கடவுளுக்கே கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றும் நம்புகிறார்கள்.
பொருட் செல்வத்துக்காகவே மட்டும் அலையும் இந்த வாழ்க்கையில் அன்பு, கருணை, நிம்மதி, உடல்-மனநலம், நீளா யுள், சமூக மதிப்பு, மானுட நேயம் உள் ளிட்ட பலவற்றை இழப்பதோடு மட்டு மின்றித் தாங்கள் சேர்த்த செல்வத்தைச் செலவழித்து மீண்டும் இவற்றையெல்லாம் பெற்று விடலாம் என்று நம்புவதுதான் அதைவிடவும் வேடிக்கையாக இருக்கிறது.
கனியைக் கனியாகச் சுவைக்காது கனி யென்று எழுதி வைத்த காகிதத்தைச் சுவைப்பது போலத்தான் இந்தச் சொத்துக் குவிப்பு வாழ்க்கையும்.
'உண்பது நாழி, உடுப்பவை இரண்டே' என்று வாழ்க்கையின் எளிமையை அழகா கக் குறிப்பிடுகிற சங்க இலக்கியம் அதனை மேலும் விரிவாக்குகிறது.
Dit verhaal komt uit de December 10, 2025-editie van Dinamani Erode & Ooty.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Erode & Ooty
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Erode & Ooty
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani Erode & Ooty
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Erode & Ooty
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Erode & Ooty
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Erode & Ooty
4-ஆம் காலாண்டு... ஒஎன்ஜிசி லாபம் ரூ.6,650 கோடி
பொதுத் துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஒஎன்ஜிசி), கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.6,649.97 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Erode & Ooty
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Erode & Ooty
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Erode & Ooty
சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.
1 min
May 28, 2026
Listen
Translate
Change font size

