Facebook Pixel சமூக நீதிக்கான அடையாளம் ஜாதிவாரி கணக்கெடுப்பு! | Dinamani Dindigul & Theni - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

சமூக நீதிக்கான அடையாளம் ஜாதிவாரி கணக்கெடுப்பு!

Dinamani Dindigul & Theni

|

May 03, 2025

அடித்தட்டு மக்களின் வாழ்வு உயரத்தைத் தொடுவதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமான ஒன்றாகிறது. அது உணவுப் பொருள்களின் விநியோகத்தில் தொடங்கி, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய ஒன்றாகும்.

- முனைவர் வைகைச்செல்வன்

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முந்தைய அதிமுக அரசு ஓர் அரசாணையை நிறைவேற்றியது. ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முடியுமா அல்லது மத்திய அரசின் துணை வேண்டுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு இப்போது ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1881-இல் தொடங்கி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், ஜாதிவாரியான புள்ளிவிவரத் தரவுகளையும் பிரிட்டிஷ் அரசு எடுத்து வந்தது. இறுதியாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு 1931-இல் நடத்தப்பட்டது. இதன்பின்னர், 1947-இல் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சுதந்திர இந்தியா தன்னைக்குடியரசாக அறிவித்துக் கொண்டதைத் தொடர்ந்து குடிமக்கள் அனைவரும் சமம் என்கிற அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை கைவிட்டது. அதன்பிறகு மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பை மட்டுமே நடத்துகிறது.

அதில் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் போன்ற தரவுகள் இடம்பெறுகின்றனவே தவிர, பிற்படுத்தப்பட்ட ஜாதியினர், முன்னேறிய வகுப்பினர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2009 முதல் 2016 வரையிலான மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2011-ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. அதாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அடங்கிய முதல் தரவுக் குறிப்புகள் திரட்டப்பட்டன.

ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பின் முழு விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடுவதற்கு அமைச்சரவையில் ஒருமித்த கருத்து இல்லாததால் வெளியிடப்படவில்லை. அன்றைக்கு அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலை வெளியிடக் கூடாது என்று கருத்து தெரிவித்தவர்களில் முக்கியமானவர்கள். அவர்களது ஆட்சிக் காலம் முடிவடைந்துவிட்டது.

பின்னர், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும், மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையிலும் பாஜக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல்தான் இருந்தது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வலுத்துவந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

MEER VERHALEN VAN Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ஸ்வீடனைப் பின்பற்றலாம் !

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

time to read

2 mins

June 27, 2026

Dinamani Dindigul & Theni

பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வியாழக்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Dindigul & Theni

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை 308 கன அடியில் இருந்து 193 கன அடியாக குறைந்தது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

time to read

1 min

June 27, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Dindigul & Theni

ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி

'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Dindigul & Theni

சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Dindigul & Theni

தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

June 26, 2026

Translate

Share

-
+

Change font size