Facebook Pixel அறம் உணர்த்துவதே கல்வி | Dinamani Dharmapuri - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

அறம் உணர்த்துவதே கல்வி

Dinamani Dharmapuri

|

May 30, 2026

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

- கோதை ஜோதிலட்சுமி

அறம் உணர்த்துவதே கல்வி

ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் உயர்வுக்கான நம்பிக்கையும் இவர்களே. பள்ளிகள், கல்லூரிகளின் பெருமைக்கும் புகழுக்கும் இவர்களின் உழைப்பே காரணமாகிறது.

சிறந்த மாணவர்களுக்கு பிரத்யேக குணாம்சங்கள் இருக்கின்றன. அவர்கள் புத்திசாலித்தனமும் கடின உழைப்பும் ஒருங்கே கொண்டவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய பிரகாசமான மாணவர்கள் படித்து முடித்து கல்விச் சாலைகளை விட்டு வெளிவரும்போது அரசு நிறுவனங்கள் முதலாக பன்னாட்டு நிறுவனங்கள் புத்தாக்கத் தொழில்களை ஆள்பவர்களாக உயர்கிறார்கள்.

மாணவர்களே சிறந்த குடிமக்களாகவும், தலைவர்களாகவும், தேசத்துக்குப் பெருமை சேர்க்கும் சாதனையாளர்களாகவும் வளர்கிறார்கள். அதனால், இவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. வீட்டுக்கும் நாட்டுக்கும் எதிர்காலத்தில் உழைக்க வேண்டிய மாணவர்களுக்கு அதற்கான சுதந்திரம் இருக்கிறதா? மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்து கொள்கிறார்கள்?

தங்கள் கனவுகளை மட்டுமல்ல, தங்கள் பெற்றோர்களின் கனவுகளையும் சுமக்கும் கட்டாயம் பெரும்பாலான மாணவர்களுக்கு இருக்கிறது. அதனால், அவர்களின் சுமை கூடுதலாகிறது அல்லது இலக்கு கடினமானதாகிறது. இலக்கை நோக்கிய பயணத்தில் போட்டி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

சூழ்நிலையின் கடினத்தை பெற்றோரின் எதிர்பார்ப்பு இன்னும் கூட்டுகிறது. அக்கம் பக்கத்தில் யாராவது ஒருவர் ஏதேனும் ஒரு துறையில் படித்து எடுத்த எடுப்பில் பெரிய வருமானத்தில் வேலைக்குப் போய்விட்டால் பெற்றோர் கவனம் அதில் நிலைபெற்றுவிடுகிறது. தங்கள் குழந்தை வளமாக வாழ வேண்டும் என்ற சிந்தனை எல்லாப் பெற்றோருக்கும் உரியது. அதிலே தவறு காண்பது சரி இல்லை.

அதேநேரத்தில் தங்கள் குழந்தைகளுக்கு அந்தத் துறையில் நாட்டம் இருக்கிறதா? அவர்களின் விருப்பம் என்னவாக இருக்கிறது என்பது குறித்து பெரும்பாலான பெற்றோருக்கு அக்கறை இல்லை. பெரிய வருமானம் வர வேண்டும் என்ற ஆர்வத்தில் குழந்தைகளின் கனவுகளைத் தெரிந்து கொள்ளாமல் அவர்களின் மீது சுமையை ஏற்றுவதுடன் கட்டாயத்தை உருவாக்குகிறார்கள். இது மாணவர்களின் மனதில் சுமையாகவும் அவர்களின் இயல்பான வளர்ச்சிக்குத் தடையாகவும் அமைந்து விடுகிறது.

MEER VERHALEN VAN Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உ.பி.யில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 30, 2026

Dinamani Dharmapuri

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

time to read

3 mins

May 30, 2026

Dinamani Dharmapuri

நீட் வினாத்தாள் கசிவு: பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வரை உண்மையான பிரச்னை ஓயாது; நமது இளைஞர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 mins

May 30, 2026

Dinamani Dharmapuri

இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

time to read

1 min

May 29, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Dharmapuri

பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!

பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Dharmapuri

மௌனம் காக்கும் சி.வி.சண்முகம்

ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவதென அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகிய இரு தரப்பும் முடிவெடுத்துள்ள நிலையில், அதிருப்தியில் இருந்து வரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகி சி.வி. சண்முகம் எம்எல்ஏவின் மௌனம் அக்கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Dharmapuri

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.

time to read

1 min

May 29, 2026

Listen

Translate

Share

-
+

Change font size