Poging GOUD - Vrij

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் பொறுப்பற்ற செயல்: ரஷியா, சீனா கண்டனம்

Dinamani Dharmapuri

|

June 23, 2025

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் பொறுப்பற்ற செயல் என்று ரஷியாவும், மேற்காசியாவில் நிலையை மேலும் மோசமாக்கும் என சீனாவும் கண்டனம் தெரிவித்தன.

மாஸ்கோ/பெய்ஜிங், ஜூன் 22:

இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டதாவது: ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சர்வதேச விதிகள், ஐ.நா. பிரகடனம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் ஆகியவற்றை மீறிய சகித்துக் கொள்ள முடியாத நடவடிக்கை. ஒரு நாட்டின் இறையாண்மையை மீறி ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசுவது என்பது மிகவும் பொறுப்பற்ற செயல்பாடு.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள ஒரு நாடு இத்தகைய செயலில் இறங்கியிருப்பது அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது. இதுபோன்ற செயல்பாடுகளை அனைவரும் இணைந்து நிராகரிக்க வேண்டும். இதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தாக்குதலால் அணுக்கதிர் வீச்சு அபாயம் வரை ஏற்படும். ஏற்கெனவே மிகவும் மோசமான தாக்குதல்களால் மோதல்போக்கு அதிகரித்து வருகிறது. இப்போது அந்த பிராத்தியத்துக்கு மட்டுமன்றி உலகின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உருவாகிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது.

இதில் ஓரிடத்தில்கூட அமெரிக்காவின் பெயரை ரஷியா நேரடியாகக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘டிரம்ப்புடன் புதின் பேசமாட்டார்’: ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேச்சு நடத்தும் திட்டம் எதுவும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு இல்லை என்று ரஷிய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ரஷிய அதிபர் இல்லமான கிரெம்ளின் மாளிகை செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோ இது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், ‘அமெரிக்க அதிபருடன் புதின் பேச்சு நடத்தும் திட்டம் ஏதுமில்லை. தேவை ஏற்பட்டால் நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும்’ என்றார்.

MEER VERHALEN VAN Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Dharmapuri

டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்

முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி

time to read

1 min

January 06, 2026

Dinamani Dharmapuri

10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

1 mins

January 06, 2026

Dinamani Dharmapuri

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Dharmapuri

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Dharmapuri

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Dharmapuri

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Dharmapuri

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Dharmapuri

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Dharmapuri

திருச்சியில் பாஜக பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

திருச்சியில் திங்கள்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

time to read

1 min

January 06, 2026

Translate

Share

-
+

Change font size