Facebook Pixel கிழக்கு உக்ரைன் நகரில் ரஷியா குண்டுமழை | Dinamani Dharmapuri - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

கிழக்கு உக்ரைன் நகரில் ரஷியா குண்டுமழை

Dinamani Dharmapuri

|

June 08, 2025

கிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் மிகப் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது.

கீவ், ஜூன் 7: இதில் 3 பேர் பலியாகினர்; 21 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல், மூன்று ஆண்டுகாலப் போரில் ரஷியா நடத்திய மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. பறக்கும் குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டன.

இது குறித்து அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:

கார்கிவ் நகர் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷியா தீவிரத் தாக்குதல் நடத்தியது. வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 215 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் 87 ட்ரோன்களையும் 7 ஏவுகணைகளையும் உக்ரைன் வான் பாதுகாப்பு தளவாடங்கள் சுட்டு வீழ்த்தின என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மைக் காலமாக உக்ரைனில் ரஷியா நடத்தும் தாக்குதல்களின் தீவிரம், இரு தரப்புகளும் விரைவில் சமாதான ஒப்பந்தத்தை எட்ட முடியாது எனும் அச்சத்தை மேலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ரஷியாவுக்குள் ரகசியமாக ஊடுருவி, அந்த நாட்டின் விமானத் தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த குண்டுவீச்சு விமானங்களை ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்கி அழித்ததற்குப் பிறகு ரஷியா தாக்குதலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

MEER VERHALEN VAN Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சி கண்டுள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மாற்றத்துக்கான நேரம்; பழிவாங்கலுக்கானதல்ல: பிரதமர் மோடி

மேற்கு வங்க மாநிலம் அச்சம்மிகுந்த சூழலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவர் மு.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மம்தாவின் கோட்டையைத் தகர்த்த பாஜக!

200-க்கும் மேற்பட்ட இடங்களுடன் அமோகம்

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Translate

Share

-
+

Change font size