Facebook Pixel நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு! | Dinamani Coimbatore - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!

Dinamani Coimbatore

|

October 10, 2025

நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.

- அனந்த பத்மநாபன்

ஒரு தலைவர் பொது நிகழ்வுகளுக்குத் தாமதமாக வருவதைப் பார்க்கிறோம். அங்கே காத்திருக்கும் பொதுமக்கள், மாணவர்கள், ஊழியர்கள் எனப் பலரின் கூட்டு நேரத்தை இந்தச் சிறு தாமதம் வீணடிக்கிறது. இது வெறும் காலவிரயம் மட்டுமல்ல; 'என் நேரம்தான் முக்கியம்' என்ற ஒரு தவறான மனப்பான்மையின் வெளிப்பாடு. இது பொதுமக்களின் நம்பகத்தன்மைக்கும், சமூகம் மீதான மரியாதைக்கும் இழைக்கப்படும் பெரும் இழுக்கு.

நாம் செல்ல வேண்டிய பேருந்தோ, ரயிலோ அல்லது விமானமோ தாமதமாக வரும்போது, நாம் எவ்வளவு அசௌகரியத்தையும் விரக்தியையும் அடைகிறோம். நமது திட்டங்கள் தடைபடுகின்றன. அடுத்து, முக்கியமான வேலைகள் தள்ளிப் போகின்றன. இந்தத் தனிப்பட்ட உணர்வே, தாமதத்தின் வலி எவ்வளவு பெரியது என்பதை உணர்த்துகிறது. சமீபத்திய வணிக ஆய்வுகளின்படி, கூட்டங்களில் ஏற்படும் இந்தத் தாமதங்களால் மட்டும் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாகப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பணியாளரும் வாரத்துக்கு ஐந்து முறை, சராசரியாக ஐந்து நிமிஷங்கள் தாமதமாக வந்தாலும்கூட, அது ஆண்டுக்கு 20 மணிநேரத்துக்கும் அதிகமான உற்பத்தித் திறனை வீணடிக்கிறது. இது ஒட்டுமொத்த பணி ஆற்றல் மற்றும் செயல்முறைகளின் மீதான சீர்குலைவு ஆகும். மறைமுகச் செலவுகளையும் கணக்கில் கொண்டால், உண்மையான இழப்பு இதை விட மிக அதிகம். கால அட்டவணையின் மீதான அலட்சியப் போக்கின் ஆழமான விளைவு இது.

MEER VERHALEN VAN Dinamani Coimbatore

Dinamani Coimbatore

கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Coimbatore

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Coimbatore

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Coimbatore

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Coimbatore

கிராண்ட் பிரீ குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 8 தங்கம்

செக் குடியரசில் நடைபெற்ற 56-ஆவது கிராண்ட் பிரீ உஸ்தி நாட் லேபம் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களைக் கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Coimbatore

இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 66 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Coimbatore

மறந்துபோன அடையாளங்கள் மீள் உருவாக்கம்

நமது கலாசார, பண்பாட்டில் மட்டுமல்லாது, பயன்பாட்டுப் பொருள்களின் உருவ, உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் அதிவேகத்தில் நிகழ்ந்து வருகின்றன.

time to read

2 mins

June 21, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சுற்றுலாப் பயணிகள் சொகுசுக் கப்பல் சென்னை வருகை

நிகழாண்டு சீசன் தொடங்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் சொகுசு கப்பல் எம் வி எம்பிரஸ் சனிக்கிழமை சென்னை துறைமுகத்துக்கு வந்தது. கப்பலில் வந்த பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

time to read

1 min

June 21, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா!

'யோகா' என்பது சம்ஸ்கிருத மொழியில் 'யுஜ்' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். 'யுஜ்' என்றால் 'ஒன்று சேர்தல்' அல்லது 'இணைதல்' என்பதாகும்.

time to read

1 mins

June 21, 2026

Dinamani Coimbatore

மேக்கேதாட்டு அணை கூடாது

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

Translate

Share

-
+

Change font size