Facebook Pixel கூட்டம் அலைமோதியபோது போலீஸ் கேரிக்கை நிராகரிப்பே 40 பேர் இறப்புக்கு முக்கிய காரணம் | Dinakaran Trichy - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

கூட்டம் அலைமோதியபோது போலீஸ் கேரிக்கை நிராகரிப்பே 40 பேர் இறப்புக்கு முக்கிய காரணம்

Dinakaran Trichy

|

September 29, 2025

தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்டத்திற்கு மாலை 3 மணிக்கு தொடங்கும் என்று கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். ஆனால் தவெக அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகல் 12 மணிக்கு தொடங்கப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு காலை 11 மணியில் இருந்து மக்கள் ஒன்று கூடினர். ஆனால் தவெக அளித்த மனுவின்படி மாலை 3 மணிக்கு நடிகர் விஜய் பிரசார கூட்டத்திற்கு வரவில்லை. அதற்கு மாறாக இரவு 7.40 மணிக்கு தான் வந்தார். இதனால் பொதுமக்களின் கூட்டம் இருமடங்காக உயர்ந்தது. அப்போது கரூர் மாவட்ட டிஎஸ்பி தவெக நிர்வாகிகளிடம் கூட்டம் அலைமோதுவதால் பாதுகாப்பு கருதி கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நடிகர் விஜய் வாகனத்தை கொண்டு செல்லாமல் 50 மீட்டர் தொலைவில் பேசினால், கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் தவெக மாநில நிர்வாகிகள் காவல் துறையின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். அதன் பிறகு கூட்ட நெரிசலில் நடிகர் விஜய் வாகனத்தை கொண்டு சென்று பிரசாரம் செய்தது தெரியவந்துள்ளது. காவல் துறையின் கோரிக்கையை தவெக மாநில நிர்வாகிகள் கேட்டிருந்தால் 40 பேர் நெரிசலில் சிக்கி இறந்து இருக்க மாட்டார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கூட்டத்திற்கான இடம் விதிமுறைகள் மீறல்

முதலில் கோரிய இடம் (லைட் ஹவுஸ் ரவுண்டானா, உழவர் சந்தை திடல்) மிக நெரிசல் பகுதி என்பதால் காவல் துறை மறுத்தும், கட்சியினர் அழுத்தம் கொடுத்து அனுமதி பெற முயற்சி செய்தனர்.

இறுதியில் வேலுசாமி புரம் இடத்தில் அனுமதி அளிக்கப்பட்ட பின்னும், கூட்டம் கூடும் அளவை சரியாக கட்டுப்படுத்த வில்லை.

பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றாதல்

கூட்டத்திற்கு தேவையான தடுப்பு வேலிகள், அவசர வெளியேறும் வாயில்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை.

மக்கள் நெரிசலை சீராக வழிநடத்த தன்னார்வலர்கள் போதுமான அளவில் நியமிக்க வில்லை.

குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ஆகியோருக்கான தனி வசதிகள் செய்யப்படவில்லை.

MEER VERHALEN VAN Dinakaran Trichy

Dinakaran Trichy

Dinakaran Trichy

வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை

பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்

time to read

3 mins

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

சரக்கு வருமானமே போயிடும்... சஸ்பெண்ட ரத்து பண்ணுங்க...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோவுடன் வைரலாக்கப்பட்டது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை நேற்று திடீரென நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது

வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Trichy

ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்

உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

சுலோவாக்கியாவின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு சுலோவாக்கியாவின் உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆப் தி வொயிட் டபுள் கிராஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் ராணுவ விமானத்தில் வந்தது

நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

மோசமான சூழ்நிலையில் தமிழகம்

லதா ரஜினிகாந்த் வேதனை

time to read

1 min

June 16, 2026

Translate

Share

-
+

Change font size