Poging GOUD - Vrij
ரூ.175.23 கோடி செலவில் 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 11 புதிய திட்டப் பணிகளுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
DINACHEITHI - NELLAI
|June 12, 2025
சென்னை ஜூன் 12தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.6.2025) ஈரோடு மாவட்டம், பெருந்துறை - விஜயமங்கலம் பகுதியில் நடைபெற்ற”வேளாண் கண்காட்சிமற்றும் கருத்தரங்கம்- 2025" விழாவில், 15 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 159 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 25 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4524 பயனாளிகளுக்கு வழங்கினார்.
-
திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பவானி வட்டம், ஜம்பையில் 59 இலட்சம் ரூபாய் செலவில் கால்நடை மருந்தகம்; கூட்டுறவுத் துறை சார்பில் சத்தியமங்கலம் வட்டம் கோணமூலை கிராமத்தில் 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் 1000 மெ.டன் ஏலக்கூட கிடங்கு, கண்ணம்மாபுரத்தில் 16 இலட்சம் ரூபாய் செலவில் வீரப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளை அலுவலகக் கட்டடம், 51 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட முகாசிப்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகக் கட்டடம்;
நீர்வளத்துறை சார்பில் தாளவாடி வட்டம், மல்லன்குழி கிராமம், பீமராஜ் நகரில் 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை, மெட்டல்வாடி அருகில் 38 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை, பைனாபுரம் கிராமம், தொட்டமுடுகரையில் 33 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை, மாதேஸ்வரன் கோவில் அருகில் 20 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் தரைப்பாலம் மற்றும் மண் சாலை;
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அந்தியூர் வட்டம், கொண்டையம்பாளையம் கிராமத்தில் 35 இலட்சம் ரூபாய் செலவில் தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய உலர்களம், சத்தியமங்கலம் வட்டம், பெரிய கள்ளிப்பட்டி கிராமத்தில் 35 இலட்சம் ரூபாய் செலவில் தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய உலர்களம், சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 10 கோடி ரூபாய் செலவில் மஞ்சள் ஏற்றுமதி மையம்;
வனத்துறை சார்பில் அந்தியூர் வனச்சரகம், கொங்காடை கிராமத்தில் 26 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கசிவுநீர் குட்டை, கேர்மாளம் வனச்சரகம், கெத்தேசால் காவல் சுற்றில் 2 கி.மீ .- க்கு 10 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவிலும், கேர்மாளம் மேற்கு காவல் சுற்றில் 1 கி.மீ .- க்கு 5 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள யானை புகா அகழிகள்;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பெருந்துறை ஒன்றியம், பொன்முடி ஊராட்சியில் பொன்முடி ஆதிதிராவிடர் குடியிருப்பு கிராமத்தில் 25 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் விவசாய சேமிப்பு கிடங்கு, அந்தியூர் ஒன்றியம், நகலூர் ஊராட்சி, சோலைகர் காலனியில் 8 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களம்;
Dit verhaal komt uit de June 12, 2025-editie van DINACHEITHI - NELLAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
“தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு பெற்று, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது” என்று, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து இருக்கிறார்.
1 min
February 23, 2026
DINACHEITHI - NELLAI
இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
1 mins
February 23, 2026
DINACHEITHI - NELLAI
தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?
மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் பட்டியல் வெளியிட முடிவு
1 min
February 23, 2026
DINACHEITHI - NELLAI
தொகுதி பங்கீடு - கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது தி.மு.க.
முதலில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் கலந்துரையாடல்
1 min
February 23, 2026
DINACHEITHI - NELLAI
தொகுதி பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று பேச்சுவார்த்தை
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
1 min
February 22, 2026
DINACHEITHI - NELLAI
இந்தியா-பிரேசில் வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் ரூ.1.81 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயம்
டெல்லியில் நேற்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min
February 22, 2026
DINACHEITHI - NELLAI
நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
1 mins
February 22, 2026
DINACHEITHI - NELLAI
டெல்லி செங்கோட்டை, முக்கிய கோவில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு
1 min
February 22, 2026
DINACHEITHI - NELLAI
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு இழந்தது
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min
February 21, 2026
DINACHEITHI - NELLAI
சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.
1 min
February 21, 2026
Translate
Change font size
