Poging GOUD - Vrij
கொடைக்கானலில் கோடை கொண்டாட்டம்- பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
DINACHEITHI - NAGAI
|May 23, 2025
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 62-வதுமலர் கண்காட்சி நாளை மறுநாள் (24-ந் தேதி) தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு திண்டுக்கல்மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
-
அதன் ஒரு பகுதியாக இசை நாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ரோஜா பூங்காவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், பொய்க்கால்குதிரை நடனம், புலியாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் நடைபெற்றது. இலை தழைகளை கட்டிக் கொண்டு மலைவாழ் பெண்கள் நடனமாடிய பாரம்பரிய இசை நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கலைக்குழுவினருடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் மகிழ்ச்சி ஆரம்பம் என்ற பெயரில் கோடை விழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகள், படகு அலங்கார போட்டிகள், அலங்கார அணிவகுப்பு, நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவையும் நடைபெற உள்ளது. கோடை விழாவுக்கு முன்னதாகவே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குவிய தொடங்கியுள்ளனர்.
Dit verhaal komt uit de May 23, 2025-editie van DINACHEITHI - NAGAI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல
பாஸ்போர்ட் , குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
June 26, 2026
DINACHEITHI - NAGAI
எல்நினோ அபாயம்: தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும்?
எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 25, 2026
DINACHEITHI - NAGAI
உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்
முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 25, 2026
DINACHEITHI - NAGAI
வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.
1 min
June 25, 2026
DINACHEITHI - NAGAI
சட்டசபையில் முதல்வர் அமைச்சர் விஜய் உறுதி
\"மக்கள் பணத்தை தொட மாட்டோம்., ஊழல் செய்தோரை விட மாட்டோம்., சட்டத்தின் முன் நிறுத்துவோம் \"என சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் உறுதியுடன் கூறினார்.
1 mins
June 24, 2026
DINACHEITHI - NAGAI
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி எண் அறிவிப்பு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான உதவி எண் 1091 என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
June 23, 2026
DINACHEITHI - NAGAI
காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
1 min
June 21, 2026
DINACHEITHI - NAGAI
60 ஆண்டுகால உறவு முறிந்தது
தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.
1 min
June 21, 2026
DINACHEITHI - NAGAI
3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்:
1 min
June 21, 2026
DINACHEITHI - NAGAI
"அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம்" என அழைப்பு
மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.
2 mins
June 20, 2026
Translate
Change font size
