Poging GOUD - Vrij
தர்மபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம், வட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
DINACHEITHI - DHARMAPURI
|July 08, 2025
வருவாய்த்துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.36.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம் மற்றும் ரூ.18.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
-
வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், பட்டா வழங்குதல் போன்ற சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இணையவழிச் சேவைகளை வழங்குதல், அலுவலகப் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் 111 வருவாய்த்துறை அலுவலகக் கட்டடங்கள் கட்டுவதற்கு 262 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டு, தற்போது வரை 71 கட்டடங்கள் 180 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் இணையவழி மூலம் 1 கோடியே 22 இலட்சம் 66 ஆயிரத்து 975 பட்டா மாறுதல் ஆணைகள் மற்றும் 17 இலட்சத்து 54 ஆயிரத்து 340 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
Dit verhaal komt uit de July 08, 2025-editie van DINACHEITHI - DHARMAPURI.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு
வணிக பயன்பாடுகளுக்கான சமையல் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஓமன் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 15 இந்தியர்கள் மீட்பு
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று கடுமையாக தாக்கியதில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழும் தமிழ்நாடும் நம் உயிர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி
“சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும்.”
1 min
March 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஆந்திரா: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 18 பேர் பலி
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஆந்திர முதல்-மந்திரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
1 min
March 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது
காப்பி அடித்தால் 3 ஆண்டு தடை
1 min
March 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஓ.பன்னீர்செல்வத்தை வருக வருக என வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முதலமைச்சர் மு.
1 min
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வருகை - திருப்பரங்குன்றம் கோவில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
1 mins
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுவிப்பு
டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min
February 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்
, அ. தி. மு. க. , நா.
1 mins
February 28, 2026
Translate
Change font size

