Poging GOUD - Vrij
செல்வியின் ஸ்வீட் சர்ப்ரைஸ்
Champak - Tamil
|January 2025
‘மகாப்பீ! டீ காப்பி!’‘இட்லி வடை, இட்லி வடை!’
வியாபாரிகளின் உரத்த சத்தம் செல்வியை எழுப்பியது. சூரியன் அஸ்தமித்து, அவர்களின் ரயில் திருநெல்வேலி சந்திப்புக்குள் நுழைந்தது.
“நாம ரீச் ஆயிட்டோமப்பா!” செல்வி தான் இருந்த மேல் பெர்த்தில் இருந்து தந்தையை கேட்டபடி கீழே இறங்கினாள்.
ஜன்னலில் தந்தையுடன் சேர்ந்து அமர்ந்தாள். அப்பாவின் முகம் மலர்ந்து கண்கள் மின்னியது.
தாத்தாவைப் பார்க்க ஆசைப்பட்டாள் செல்வி. தாத்தா திருநெல்வேலியில் இருந்து முறுக்கு மற்றும் பிற தின்பண்டங்களை சென்னைக்கு வரும்போதெல்லாம் கொண்டு வருவார். அவரைப் பார்த்து ஒரு வருடம் ஆயிற்று. எனவே செல்வியின் அப்பா பொங்கல் விடுமுறைக்கு, தாத்தாவைப் பார்க்க முடிவு செய்திருந்தார்.
“செல்வி, நான் இங்கே இருக்கிறேன்!” தாத்தா அவர்களைப் பார்த்ததும் கூறினார்.
“தாத்தா! உங்களை பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று செல்வி சத்தமிட்டு அவர் மீது தொத்திக் கொண்டாள்.
“எப்படி இருக்கிறாய், என் இனிய கருப்பு ஹல்வா?” என்று கேட்டார் தாத்தா.
“தாத்தா, எனக்கு நீங்கள் வைத்த செல்ல பேரை இன்னுமா ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள்.”“ஆமாம் குட்டிமா, திருநெல்வேலியின்
சிறந்த அல்வாவை விட நீ இனிமையானவள்!” என்று சிரித்துக் கொண்டே ஒரு சிறிய செய்தித்தாள் பார்சலைக் கொடுத்தார் தாத்தா.
பார்சல் சூடாக இருந்தது. செல்வி அதை ஆவலுடன் திறந்து பார்த்தாள், உள்ளே இன்னொரு வாழை இலை பொட்டலம் இருந்தது. பாக்கெட்டிலிருந்து ஒரு இனிமையான நறுமணம் எழுந்து செல்வியின் நாசியை துளைத்தது. அதில் என்ன இருக்கிறது என்று அவளுக்குத் தெரியும், அவள் வாயில் எச்சில் ஊற ஆரம்பித்தது.
“இங்கே சாப்பிடலாமாப்பா?” ரயிலில் இருந்து சாமான்களை இறக்கி கொண்டிருந்த தந்தையிடம் கேட்டாள். “இல்லை செல்வி, இங்கே வேண்டாம். புழுதியும் கூட்டமும் குறையட்டும் காருக்கு செல்லும் வரை காத்திரு” என்று அப்பா பதிலளித்தார்.
“ஆனா இது ஆறி போய்டுமேப்பா!” செல்வி வாதிட்டாள்.
Dit verhaal komt uit de January 2025-editie van Champak - Tamil.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Champak - Tamil
Champak - Tamil
பரம ரகசியம்
அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.
2 mins
December 2025
Champak - Tamil
டைகரூவின் குளியலறை சாகசம்!
இன்று டைகரூ குளிக்க ஆசைப்பட்டது.
3 mins
December 2025
Champak - Tamil
பூர்கூ கரடியின் இனிய ஹைபர்நேஷன் இரவுகள்
டிசம்பர் மாதம். இமயமலையின் பள்ளத்தாக்கில் குளிர் தன் முழு வீரத்தையும் காட்டியது.
2 mins
December 2025
Champak - Tamil
சந்தை நாள்
ஒவ்வொரு ஆண்டும், ரிதுவின் பள்ளியில் “சந்தை நாள்” கொண்டாடப்படுகிறது.
2 mins
December 2025
Champak - Tamil
டின்னி கொக்கின் நீண்ட பயணம்!
சைபீரியாவின் வட பகுதியில் அதிகக் குளிர் நிலவத் தொடங்கியது.
3 mins
December 2025
Champak - Tamil
பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்
வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.
3 mins
December 2025
Champak - Tamil
பிரியாவும் தோட்ட அரக்கனும்
அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.
3 mins
November 2025
Champak - Tamil
குழந்தைகள் தினம்
அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
2 mins
November 2025
Champak - Tamil
பூ கற்றுத் தந்த பாடம்
அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.
2 mins
November 2025
Champak - Tamil
இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்
ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.
3 mins
November 2025
Translate
Change font size
