Newspaper
DINACHEITHI - TRICHY
சென்னை மக்களை வறுத்தெடுத்த கொடூர வெயில்
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடையின் தாக்கம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. கடந்த மே 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது கடந்த 28-ந்தேதி முடிவடைந்தது. அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட குறைந்தே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சில நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து காணப்பட்டது. இதற்கிடையே அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் சென்னையில் வெயில் தாக்கம் அதிகரித்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
சத்தீஸ்கர் என்கவுன்டர்கள் திட்டமிட்ட கொடுமையின் வடிவம்
நக்சலிசத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சபதம் எடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மேடைதோறும் இதேயே முழங்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நக்சலைட்டுகள் பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும்
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
ஆபரேஷன் சிந்தூர் குழுவினருடன் அடுத்த வாரம் பிரதமர் மோடி சந்திப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி- விவசாயிகள் மகிழ்ச்சி
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
பண்ணீர் அம்மன் கோவில் அருகே 3 மணி நேரம் ஒற்றை யானையால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவிலை ஒட்டிய சோதனை சாவடி அருகே சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஆரம்பமாகிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கேதர்நாத், பத்ரிநாத் கோவில்களில் சாமி தரிசனம்
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா தன்னுடைய குடும்பத்தினருடன் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் தம் பகுதிகளுக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
சென்னை ஜூன் 4தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
இழப்புகள் முக்கியமல்ல, பலன்தான் முக்கியம்
ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார். புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று, 'எதிர்காலப் போர்' என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் அனில் சௌகான் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
டொனால்டு டிரம்ப் - சீனா அதிபர் பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 145 சதவீத வரியை உயர்த்தினார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
கேப்டனுக்கும் கலைஞருக்குமான அந்த அன்பும், நட்பும் மிக ஆழமானது
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரை புகழ்ந்து பலராலும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
ஆவேசமாக டேபிளை தட்டிய கார்ல்சன்- தனது ரியாக்ஷன் குறித்து குகேஷ் பேட்டி
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியாவில் கொரோனா பாதிப்பு:கேரளாவில் அதிகம்
2019-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்று, மீண்டும் மீண்டும் புதுப்புது வடிவங்களில் உருமாறி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தற்போதும் ஒரு புதிய வடிவத்தில் வந்துள்ளது. தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என எண்ணிக்கை தொடங்கிய தொற்று, தற்போது 4 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
விருதுநகர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
விருதுநகர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது குறித்து அவரது அறிக்கை வருமாறு :-
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
நாட்டிற்காக அனைவரும் ஒன்றாக செயல்படுவோம் - கனிமொழி பேட்டி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதுகுறித்தும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவது குறித்தும் சர்வதேச நாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்க, அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
பெங்களூர் சென்று திரும்பிய வேடசந்தூர் வாலிபருக்கு கொரோனா
உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
ஜி7 உச்சி மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிப்பு?
ரஷியா-உக்ரைன் மோதல் மற்றும் மேற்கு ஆசியாவின் நிலைமை உள்ளிட்ட உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து ஆலோசிக்கும் வகையில் ஜி7 உச்சி மாநாடு இந்த ஆண்டு கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
சிவகங்கையில் ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக்கொலை
சிவகங்கை மாவட்டம் திருமலையில் சுப்பு என்பவர் தோட்டத்தில் ஆடு, கோழி வளர்த்து வந்தார். இந்நிலையில், அவரது தோட்டத்தில் உள்ள ஆடு, கோழியை திருட நேற்று அதிகாலை மணிகண்டன், சிவசங்கரன் என்ற 2 பேர் வந்துள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
சிந்து நதிநீர் நிறுத்தம்: கடுமையான தண்ணீர் பஞ்சத்தை நோக்கி பாகிஸ்தான்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க 6-ந்தேதி கடைசி நாள்
அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. என்ஜினீயரிங் படிப்புக்கு வருகிற 6-ந்தேதி வரை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
6000 வீரர்களின் உடல்கள் பரிமாற்றம்: உக்ரைன் - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு
மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவும் உக்ரைனும் துருக்கியில் மீண்டும் நேற்று முன்தினம் நேரடி அமைதிப்பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
பனோலிக்கு எதிராக புகார் அளித்தவர் மாயம்: தந்தை அதிர்ச்சி பேட்டி
அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்தவர் ஷர்மிஷ்டா பனோலி. புனே சட்ட பல்கலைக்கழக 4-ம் ஆண்டு மாணவியான இவர், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுத படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பற்றி பாலிவுட்டை சேர்ந்த முஸ்லிம் நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் என்று பகிர்ந்து உள்ளார். இது வகுப்புவாத மோதலை தூண்டி விடுகிறது என எதிர்ப்பு வலுத்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
பிசிசிஐ-ன் இடைக்கால தலைவராகிறார் ராஜீவ் சுக்லா
பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி 2022 அக்டோபர் முதல் இருந்து வருகிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் 1983 உலகக் கோப்பை வென்றவருமான இவர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து 36-வது தலைவராகப்பொறுப்பேற்றார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
கோர்ட்டிற்கு சென்றுவிடுவோம் என பயந்து மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்து இருக்கிறார்
கருணாநிதியின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை போட்டியின்றி நியமனம் செய்யும் வகையில் 2 சட்டமசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
1 min |
June 04, 2025
DINACHEITHI - TRICHY
கிருஷ்ணகிரியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நடத்த வேண்டும் என்று, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
கொடைக்கானல் டோபிகானல் நீர் வீழ்ச்சி ஓடையில் டன் கணக்கில் குப்பைகள்
குடிநீர் மாசடையும் சூழல், குப்பைகளை அகற்ற கோரிக்கை
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
திண்டுக்கல்லில் பருவமழை முன்னேற்பாடுகள் ஒத்திகை பயிற்சி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமையில் நேற்று (02.06.2025) நடைபெற்றது.
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
பாரிஸ் கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்
நூற்றுக் கணக்கானோர் காயம்; 500 பேர் கைது
1 min |
June 03, 2025
DINACHEITHI - TRICHY
தேனி:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறையினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நேற்று (02.06.2025) காலாண்டு தணிக்கை செய்தார்.
1 min |
