Dravidian Herald - அக்டோபர் 2022
Dravidian Herald Description:
திராவிடக்கட்டியம் (The Dravidian Herald) என்பது
திராவிடச்சிந்தனைகள், திராவிடப்பொருளாதாரம், திராவிடக்கலைகள் குறித்து மாதமொருமுறை வெளிவரும் மின்னிதழ் ஆகும்
In dit nummer
தன்னை எரித்துக் கொல்ல போகிறார்கள் என்று அந்த குழந்தைக்கு அப்போது தான் தெரிகிறது.
ஓவென்று அழத் தொடங்குகிறாள். புழுதியில் விழுந்து, இழுத்துச் செல்கின்ற கால் பிடித்துக் கதறுகிறாள். அலங்காரம் அலங்கோலமாகி கண்ணீரும் கம்பலையுமாக, தொண்டை வற்றக் கதறி ஒரு குழந்தை உயிர்ப் பிச்சை கேட்டும், அங்கே யாரும் இரங்கவில்லை.
முதல் கட்டுரையில் இருந்து
Donald Campbell என்கிற ஐரோப்பியன் இந்தியாவைக் காணும் திட்டத்தில் கப்பல் ஏறி பாதி வழியில் கப்பல் உடைந்து ஒரு வழியாக இந்தியக் கரையேறி கைது செய்யப்படுகிறான்.
சிறையில் அடைக்கப்பட்டு தம் நண்பர்களின் உதவியுடன் விடுதலையாகி பின் இந்தியாவைச் சுற்றி வந்து தன் அனுபவங்கள் பற்றி கேம்ப்பெல் எழுதிய இந்த
நூலில் அவர் திருவிதாங்கூரில் இருந்து பாளையங்கோட்டை, மதுரை திருச்சி தஞ்சாவூர் நாகப்பட்டினம் வழியாக சென்னை சென்று திரும்பிய அனுபவங்களை குறிப்பிட்டிருக்கிறார்.
அதில் தஞ்சையில் அவர் பார்த்ததை குறிப்பிட்டு இருப்பது மிக முக்கியமான பதிவாகும். இதை இரண்டாவது கட்டுரையில் காணலாம்
