Facebook Pixel பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்! | Aanmigam Palan - religious-spiritual - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!

Aanmigam Palan

|

July 16-31, 2025

நாகபஞ்சமி - ஜூலை 29,2025

பகவானின் முதல் தொண்டனை வணங்குவோம்!

ஆடி மாதத்தில் கருட பஞ்சமி, நாக பஞ்சமி, நாக சதுர்த்தி வருகிறது.

இந்த விசேஷங்களில் பெரிய திருவடியான கருடனையும், நாகங்களையும் நினைத்து வழிபட வேண்டும். நாக சதுர்த்தி / பஞ்சமி அன்று கிராமத்தில் புற்று மாரியம் மண் கோயில்களுக்குச் சென்று நாகங்களை வழிபடுகின்றார்கள். நாகங்களை வழிபடுவது ஆதிகாலத்திலிருந்து மக்கள் செய்து வரும் வழிபாடு. அதுவும் எளிய மக்களின் வழிபாடு.

இந்தக் கட்டுரையில் நாக பஞ்சமி / சதுர்த்தியை முன்னிட்டு, நாகங்களின் தலைவனான ஆதிசேஷனைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பகவானைப் பிரியாதவன்

பகவான் தன்னோடு பிரியாமல் வைத்துக் கொள்வது இரண்டு பேரை. ஒன்று மகாலட்சுமித் தாயாரை. “ஒரு நொடியும் பிரியாள்” என்பதுபோல, பகவானுடைய திருமார்பிலே எழுந்தருளி இருப்பவள் மகாலட்சுமி. அதனால்தான் பெருமாளுக்கே திருமால் என்று பெயர். திரு இல்லாத மால் இருக்க முடியாது.

பகவானுக்கு திருமாமகள் செல்வன், திருவாழ்மார்பன், ஸ்ரீநிவாசன் என்றெல்லாம் திருப்பெயர்கள் உண்டு. அதைப் போலவே பகவானைப் பிரியாமல் இருக்கக் கூடிய நித்யசூரிகள் ஒருவர் அனந்தன் என்று அழைக்கப்படும் ஆதிசேஷன்.

விண்ணாடு என்று சொல்லப்படும் பரமபதத்தில் நித்திய கைங்கரியம் செய்யக்கூடிய ஆத்மாக்களை நித்யசூரிகள் என்று அழைப்பார்கள். அதன் வரிசையைச் சொல்லுகின்ற பொழுது அனந்த, கருட, விஷ்வக்சேனர் என்று சொல்வார்கள். இந்த வரிசையில் முதலாவதாக வருபவர் ஆதிசேஷன்தான்.

முதல் தொண்டன்

தலைவனை சேஷி என்றும், தொண்டனை சேஷன் என்றும் குறிப்பிடும் வழக்கம் வைணவத்தில் உண்டு.

பகவானுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பினை சேஷ - சேஷி பாவம் என்பார்கள். ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் இந்த சேஷ - சேஷி பாவம்தான்.

கருடன், பகவானுடைய புறப்பாட்டின் போது வருவார். “**பறவை ஏறும் பரம் புருடா**” என்று அப்பொழுது பகவானை மங்களாசாசனம் செய்வார்கள். இது கருடனுக்கு பெருமை.

ஆனால் மற்ற நேரத்தில் அவர் பெருமாளுக்கு எதிரிலே, பெருமாள் எப்போது அழைப்பாரோ என்று தயார் நிலையில் கைகூப்பி நிற்பார். இதைத்தான் பல சந்நதிகளில் காண்கின்றோம்.

FLERE HISTORIER FRA Aanmigam Palan

Aanmigam Palan

Aanmigam Palan

-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!

நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.

time to read

3 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

புராணங்கள் சுட்டும் இலக்கு

பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா

அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.

time to read

5 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?

வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

திருப்பதி

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்

பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:

time to read

1 min

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.

time to read

1 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி

தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.

time to read

2 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பக்த மீராபாய்

உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.

time to read

6 mins

March 16-31, 2026

Aanmigam Palan

Aanmigam Palan

பெரியாழ்வாரும் நாச்சியாரும்

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.

time to read

5 mins

March 16-31, 2026

Translate

Share

-
+

Change font size