Prøve GULL - Gratis

மக்கள் வெளிப்படுத்திய செய்தி

Virakesari Weekly

|

May 11, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிந்துவிட்டது. ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சிகள் கூட்டணி அமைத்தல், ஆட்சியமைத்தல் என்பனவற்றுக்கான தீவிர முயற்சிகளில், பேச்சுக்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டன.

- ரொபட் அன்டனி

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு சுமார் 8,200 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் 265 உள்ளூராட்சி மன்றங்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி தனிக்கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. அவற்றில் 116 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தை ஆளும் கட்சி பெற்றுள்ளது.

120 உள்ளூராட்சி மன்றங்களுக்கான சபைகளில் ஆளும் கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று, 29 உள்ளூராட்சி மன்றங்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்கட்சிகளும் சமமான ஆசனங்களைப் பெற்றுள்ளன. அந்த வகையில் 265 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ள போதிலும், அவற்றில் 149 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதில் அக்கட்சி நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது. தற்போது சுயேச்சைக் குழுக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 14 உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றியுள்ளது. மேலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சபைகளில் சகல எதிர்க்கட்சிகளையும் இணைத்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியுள்ளது.

"சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய செய்தியை மக்கள் தேர்தலில் வழங்கியுள்ளனர்" என்று குறிப்பிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. மறுபுறம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அமோக வெற்றியீட்டியுள்ளன. வடக்கு, கிழக்கிலுள்ள 37 உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றியீட்டியுள்ளது. இவற்றில் பல சபைகளில் கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூன்று சபைகளிலும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஒரு உள்ளூராட்சி மன்றத்தையும் கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து சபைகளைக் கைப்பற்றியுள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் பாரியளவு வெற்றியைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. வடக்கில் ஒரு பிரதேச சபையைத் தவிர வேறு எந்தவொரு சபையையும் தேசிய மக்கள் சக்தியினால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

FLERE HISTORIER FRA Virakesari Weekly

Virakesari Weekly

மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு

வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்

யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்

பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்

இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அடுத்த கட்ட சாணக்கியம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.

time to read

3 mins

June 29, 2025

Virakesari Weekly

ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு

அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்

நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

சிக்கிக் கொண்ட கடற்படை

இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.

time to read

2 mins

June 29, 2025

Virakesari Weekly

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி

பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.

time to read

1 min

June 29, 2025

Translate

Share

-
+

Change font size