Prøve GULL - Gratis
இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட ஐந்தாவது ஞாபகார்த்த நாணயத்தாள்
Virakesari Daily
|September 01, 2025
இலங்கை மத்திய வங்கியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று நாணயத்தின் உள்நாட்டுப் பெறுமதியை நிலையாகப் பேணுவதாகும். பொருளாதார மற்றும் விலை மட்டங்களின் உறுதியைப் பராமரிப்பதன் மூலம் பணவீக்கம் மற்றும் பணச்சுருக்க நிலைமைகளற்ற பொருளாதாரத்தைப் பராமரிப்பது இதன் குறிக்கோளாகும்.
அந்தவகையில் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் சுற்றோட்டத்திற்கு விடப்படும் 2000 ரூபா ஞாபகார்த்த நாணயத்தாளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
தேசத்தின் முன்னேற்றத்திற்கான அத்திவாரமாக பொருளாதார உறுதிப்பாட்டைப் பேணுவதற்கான மத்திய வங்கியின் தளராத அர்ப்பணிப்பினை பிரதிபலித்து 'சுபீட்சத்திற்கான உறுதிப்பாடு' எனும் ஆண்டு நிறைவின் கருப்பொருளுக்கு ஒத்திசைவாக இந்நாணயம் அமைந்துள்ளது. இது இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்படும் ஐந்தாவது ஞாபகார்த்த நாணயத்தாளாகும்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி.நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதியும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வெள்ளியன்று காலை ஞாபகார்த்த நாணயத்தாள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
நாணயத்தின் முன்பக்கம் இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகக் கட்டிடத்தையும், கொழும்பு வெளிச்சவீட்டு மணிக்கூட்டுக் கோபுரத்துடன் இணைத்து அண்மைய நகர அபிவிருத்தியைக் காண்பிக்கின்ற கொழும்பின் தொடுவானத்தையும், 75ஆவது ஆண்டுநிறைவு இலட்சினையையும் கொண்டுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பொதுமக்கள் அத்தாட்சிப்படுத்தலை வசதிப்படுத்துவதற்கும் நிறம் மாறுகின்ற பாதுகாப்பு நூல் புகுத்தப்பட்டுள்ளது.
தொடுகையின் மூலம் நாணயத் தாளை இனங்கண்டுகொள்வதற்கு கட்புலக் குறைபாடு உடையவர்களுக்கு உதவுவதற்கான ஒவ்வொன்றும் வைர வடிவத்துடனான ஆறு உயர்த்தப்பட்ட கட்டங்கள் இடது மற்றும் வலது ஓரங்களின் இரு மருங்கிலும் அச்சிடப்பட்டுள்ளது.
நாணயத் தாள் அதன் பின்பக்கத்தில் பொருளாதாரத் தாக்குப்பிடிக்கும் தன்மை, முன்னேற்றம் என்பனவற்றுக்கான மத்திய வங்கியின் கடமைப்பொறுப்பினை அடையாளப்படுத்தி இலங்கையின் வண்ணமயமான வரைபடம், நீல அல்லி, மத்திய வங்கியின் நோக்கக்கூற்று என்பனவற்றை எடுத்துரைக்கின்றது.
Denne historien er fra September 01, 2025-utgaven av Virakesari Daily.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
