Prøve GULL - Gratis
மஹிந்தானந்தவுக்கு 20 வருடங்கள் நளினுக்கு 25 ஆண்டுகள் சிறை
Virakesari Daily
|May 30, 2025
14,000 கெரம், 11,000 டாம் பலகைகளை கொள்வனவு செய்து விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் மேல் நீதிமன்றம் தீர்ப்பு
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் 14,000 கரம் மற்றும் 11,000 டாம் பலகைகளை கொள்வனவு செய்து விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ச.தொ.ச.வின் முன்னாள் தலைவர் பின்னர் வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய நளின் பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகள் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பறிவித்தது.
மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வு ஏகமனதாக இந்த தீர்ப்பை அறிவித்தது.
அதன்படி, முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. நளின் பெர்னாண்டோவுக்கு நான்கு இலட்சம் ரூபா அபராதமும், மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு இரண்டு இலட்சம் ரூபா அபராதமும் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம், அதனை செலுத்தத் தவறினால் மேலதிகமாக சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவித்தது.
ஆறு ஆண்டுகள் நீடித்த நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், நீதிபதி மஹேன் வீரமன் தலைமையிலான பிரதீப் அபேரத்ன மற்றும் அமலி ரணவீர ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பை அறிவித்த மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் தலைவரான நீதிபதி மஹேன் வீரமன், அரசியல் நோக்கங்களுக்காக இலங்கை விளையாட்டு கூட்டமைப்பு மூலம் 14,000 கரம் பலகைகள் மற்றும் 11,000 டாம் பலகைகளை இறக்குமதி செய்து விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 53 மில்லியன் ரூபாவுக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக கூறினார்.
அதன்படி, பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்மானிப்பதாகவும் மூன்று பேர் கொண்ட அமர்வின் தலைமை நீதிபதி மஹேன் வீரமன் அறிவித்தார்.
பின்னர் தலைமை நீதிபதி, தண்டனை வழங்குவதற்கு முன்பு பிரதிவாதிகள் சார்பாக எதும் சொல்வதற்கு இருப்பின் அவற்றை முன்வைக்குமாறு அறிவித்தார்.
இதன்போது, முதல் குற்றவாளி நளின் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா விடயங்களை முன்வைத்தார்.
Denne historien er fra May 30, 2025-utgaven av Virakesari Daily.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size

