Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!

Dinamani Virudhunagar

|

October 25, 2025

உலக அளவில் ஒரு நாட்டின் பொருளாதார சக்கரச் சுழற்சியை இயங்கச் செய்வதிலும், நாட்டின் நிதிக் கட்டமைப்பின் வலிமையை நிர்ணயிப்பதிலும் அந்நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்புதான் முக்கியப் பங்காற்றுகிறது. எனவேதான், ஒரு நாடு பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் போதும், கடன் சுமை அதிகரிக்கும் போதும், தங்கத்தை விற்று நெருக்கடியைச் சமாளித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அடிக்கல்லாக, பாதுகாப்பு கவசமாக தங்கம் விளங்குகிறது.

- பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!

அன்றைய துருக்கியின் பகுதியான லிடியாவில் குரோசஸ் மன்னரின் காலத்தில் (கி.மு.561) முதல்முதலில் தங்க நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, எல்லா சொத்துகளையும்விட உலகில் அதிகமாகப் பரிமாற்றம் செய்யப்படும் பொருளாகத் தங்கம் விளங்குகிறது. அமெரிக்காவின் பங்குச் சந்தைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான வர்த்தகம் தங்கத்துக்காக நடைபெறுகிறது. காரணம், தங்கம் வழங்கும் பாதுகாப்பை எந்த முதலீடும் வழங்குவது இல்லை.

லண்டனில் செயல்படும் உலக தங்க சபை (வேர்ல்ட் கோல்ட் கவுன்சில்) கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட பட்டியலின்படி, உலகில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் நாடுகளில், வழக்கம்போல் அமெரிக்கா தன் கையிருப்பில் 8,133 டன் தங்க கையிருப்புடன் முதலிடத்தில் உள்ளது. இத்தகைய பெரும் தங்க இருப்புதான், அதன் நாணயத்துக்கு (டாலர்) சர்வதேச சந்தையில் அதிக நம்பிக்கையை உருவாக்குகிறது.

இந்தப் பட்டியலில் அடுத்த ஏழு இடங்களில் முறையே ஜெர்மனி (3,351 டன்), இத்தாலி (2,451 டன்), பிரான்ஸ் (2,436 டன்), ரஷியா (2,333 டன்), சீனா (2,292 டன்), ஸ்விட்சர்லாந்து (1,040 டன்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா 880 டன் தங்கத்துடன் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த தங்க கையிருப்பே, இந்தியாவின் அந்நிய செலாவணியைப் பாதுகாக்க உதவுகிறது. உலக தங்க சபையின் தரவுகளின்படி, உலகின் மொத்த தங்க தேவையில், இந்தியா 26 சதவீத பங்கு வகிக்கிறது.

திடீரென ஒரு நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்தால், தங்கத்தை விற்று அந்த நெருக்கடியைச் சமாளிக்கலாம். சந்திரசேகர் இந்திய பிரதமராக 10.11.1990 முதல் 21.06.1991 வரை 223 நாள்கள் மட்டுமே பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலத்தில், 1991-ஆம் ஆண்டு மே மாதத்தில், நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடியை சமாளிக்கவும், வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களைச் செலுத்தவும், இறக்குமதியைக் கையாளவும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (ஐஎம்எஃப்) கடன் பெறவும். 47 டன் தங்கம் பாங்க் ஆஃப் இங்கிலாந்திடமும், மீதமுள்ள 20 டன் தங்கம் பாங்க் ஆஃப் ஸ்விட்சர்லாந்திலும் அடமானம் வைக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டது.

FLERE HISTORIER FRA Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

பங்குச் சந்தையில் 6 நாள் உயர்வுக்கு முடிவு

ஆறு நாள் உயர்வுக்குப் பிறகு எஃப்எம்சிஜி மற்றும் வங்கி பங்குகளில் லாப நோக்கு விற்பனை மற்றும் அந்நிய முதலீட்டு வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

October 25, 2025

Dinamani Virudhunagar

பிஎன்பி நிகர லாபம் 14% உயர்வு

பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பர் காலாண்டில் 14 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 25, 2025

Dinamani Virudhunagar

உக்ரைனுக்கு டாமஹாக் வழங்கினால் கடும் பதிலடி: அமெரிக்காவுக்கு புதின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு அமெரிக்கா டாமஹாக் ஏவுகணைகளை வழங்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வியாழக்கிழமை எச்சரித்தார்.

time to read

1 min

October 25, 2025

Dinamani Virudhunagar

கனடாவுடன் வர்த்தகப் பேச்சை ரத்து செய்தார் ட்ரம்ப்

டிவி விளம்பரத்தால் சர்ச்சை

time to read

1 min

October 25, 2025

Dinamani Virudhunagar

கேரள ஆளும் இடதுசாரி கூட்டணியில் சர்ச்சை

‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தில் இணைந்ததால் கருத்து வேறுபாடு

time to read

1 mins

October 25, 2025

Dinamani Virudhunagar

மறுக்கப்படும் உரிமை!

ஒரு காலத்தில் சலுகையின் அடையாளமாகக் கருதப்பட்ட விடுப்பு, இன்று பணியாளர்களின் அடிப்படை உரிமையாகவும், சமூகப் பாதுகாப்பின் இன்றியமையாத அங்கமாகவும் நிலைபெற்றுள்ளது. இருப்பினும், சட்டக் கட்டமைப்புகளுக்கும், களத்தில் நிலவும் நடைமுறைச் சூழல்களுக்கும் இடையேயான முரண்பாடுகளால், விடுப்பு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

time to read

2 mins

October 25, 2025

Dinamani Virudhunagar

அன்புள்ள ஆசிரியருக்கு...

பாரம்பரிய மருத்துவம்

time to read

1 min

October 25, 2025

Dinamani Virudhunagar

டொயோட்டா விற்பனை 16% அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பர் மாதத்தில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 25, 2025

Dinamani Virudhunagar

ஆந்திரம்: பேருந்து தீ விபத்தில் 20 பயணிகள் கருகி உயிரிழப்பு

ஆந்திர மாநிலம், கர்னூல் அருகே ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை மோதி தீப்பிடித்து எரிந்ததில் 2 குழந்தைகள் உள்பட 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தெலங்கானா, ஆந்திரம், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.

time to read

1 min

October 25, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!

உலக அளவில் ஒரு நாட்டின் பொருளாதார சக்கரச் சுழற்சியை இயங்கச் செய்வதிலும், நாட்டின் நிதிக் கட்டமைப்பின் வலிமையை நிர்ணயிப்பதிலும் அந்நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்புதான் முக்கியப் பங்காற்றுகிறது. எனவேதான், ஒரு நாடு பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் போதும், கடன் சுமை அதிகரிக்கும் போதும், தங்கத்தை விற்று நெருக்கடியைச் சமாளித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அடிக்கல்லாக, பாதுகாப்பு கவசமாக தங்கம் விளங்குகிறது.

time to read

3 mins

October 25, 2025

Listen

Translate

Share

-
+

Change font size