Prøve GULL - Gratis
திராவிட மொழிகளின் தாய் தமிழ்!
Dinamani Virudhunagar
|June 07, 2025
தமிழ் அல்லாத ஒரு மொழி திராவிட மொழிகளுக்குத் தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததே இல்லை. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த 73 மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் இலக்கிய வழக்கும் பேச்சு வழக்கும் உள்ள மொழிகளாகும்; மற்றவையாவும் வெறும் பேச்சு வழக்கில் உள்ள மொழிகள்தான்.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்து கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்கு தெற்கில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை என்பது தெரிகின்றது எனப் பாவாணர் தமிழ் வரலாறு குறித்து எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் தோன்றியது என தமிழறிஞர்கள் முதலில் கருதினர். ஆனால், கீழடி ஆய்வுக்குப் பிறகு சங்க இலக்கியங்களின் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்பு என்பது உறுதியாகியுள்ளது. அப்படியானால், தொல்காப்பியத்தின் காலம் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகும். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலால் தொல்காப்பிய காலத்திற்கு முன்பே தமிழில் பல இலக்கியங்கள் தோன்றியிருக்கவேண்டும்.
அதைப்போல பல சூத்திரங்களில் என்ப, என்பனார் எனத் தொல்காப்பியர் சுட்டிச் செல்கிறார். அதாவது, அவர் காலத்திற்கு முன்பே தமிழில் பல இலக்கண நூல்கள் இருந்திருக்கின்றன என்பது இவற்றின் மூலம் பெறப்படுகிறது. எனவே, தமிழின் தொன்மை இன்னும் பழைமையானது என்பது உறுதியாகிறது.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலேயே குமரிலபட்டர் என்னும் தெலுங்கு அறிஞர், தெலுங்கைத் தமிழ்மொழியிலிருந்து பிரித்துக் காட்டுவதற்காக ‘ஆந்திர திராவிட பாஷா’ என்று கூறினார். அதற்குப் பின்னரே கன்னடமும் மலையாளமும் தமிழிலிருந்து பிரிந்தன.
கன்னடமும், களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் என்று பேரா. சுந்தரம் பிள்ளை கூறியது பழந்தமிழைப் பொருத்தவரை உயர்வு நவிற்சி அல்ல, உண்மை.
பழந்தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும் உள்ள வேறுபாடு மிகச் சிறிய அளவினதே ஆகும். இலத்தீன் மொழிக்கும், இத்தாலியம், பிரெஞ்சியம், ஸ்பானியம், போர்த்துகீசியம் முதலிய மொழிகட்கும் இடைப்பட்ட உறவே தமிழுக்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய திராவிட மொழிகட்கும் இடைப்பட்ட உறவாகும்.
Denne historien er fra June 07, 2025-utgaven av Dinamani Virudhunagar.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Virudhunagar
அரசு மரியாதையுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் உடல் தகனம்
சென்னையில் மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
1 min
June 29, 2026
Dinamani Virudhunagar
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Virudhunagar
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Virudhunagar
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Virudhunagar
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Virudhunagar
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Translate
Change font size
