Prøve GULL - Gratis
புதிய தலைமைக்கான கல்வி!
Dinamani Tiruvannamalai
|March 29, 2025
நமக்குத் தேவையான தலைமை என்பது நிறுவனத் தலைமை அல்ல. மக்களுக்கு வழிகாட்டும் செயல்பாட்டுத் தலைமை. அந்தத் தலைமை மக்களின் மீது நம்பிக்கையும், அன்பும் கொண்டிருக்க வேண்டும். அப்படி மக்களிடம் மாறா அன்பும், நம்பிக்கையும் கொண்டு மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
-
லைமை என்பது ஒரு மனிதரிடம் இருக்கிற மக்களை வசீகரிக்கும் ஒருங்கிணைக்கும் குணங்கள், திறன்கள், ஆற்றல்களாகும். தலைமை என்பது அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.
ஒவ்வொருவரும் தாங்கள் பொறுப்பில் இருக்கும் அமைப்பில், நிறுவனத்தில் தங்கள் குணங்களையும், திறன்களையும், ஆற்றல்களையும் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அவற்றின் தாக்கங்களை அவர் செயல்படுகிற நிறுவனத்தில், அமைப்பில் நம்மால் பார்க்க இயலும்.
இந்தக் குணங்களும், திறன்களும், ஆற்றல்களும் தாமாகவே எவருக்கும் வந்துவிடாது. வலிந்து முயற்சி செய்யும் தொடர் பயிற்சிகளின் மூலமே அவற்றைப் பெற முடியும். இவை அனைத்தும் வளர்ந்தால், உயர்ந்தால் செயல்படுகின்ற இடத்தில் வியாபிப்பதும், தளர்ந்தால் தளர்வதையும் நாம் பார்த்து வருகிறோம்.
இதில் மூன்று இடத்தில் தலைமைத்துவம் என்பது பெரும் ஆய்வுப் பொருளாக மாறியுள்ளது. ஒன்று, அரசுத் தலைமை; இரண்டு, சமூகத் தலைமை; மூன்று, சந்தைத் தலைமை.
இந்த மூன்றில் சந்தைத் தலைமையை வளர்க்கத்தான் உலகத்தில் பெரும் நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாகத்தான் இன்று சந்தையில் வளர்ந்த, மேம்பட்ட உச்சம் பெற்ற தலைமையைப் பார்க்க முடிகிறது. ஆகையால்தான், சந்தை வலுவடைந்து அரசாங்கத்தையும், சமூகத்தையும் வயப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளது.
உலகம் வியக்கக்கூடிய அளவில் தலைமைத்துவக் குணங்கள், திறன்கள், ஆற்றல்கள் வளர்த்தெடுக்கப்படுவதை சந்தையில் நாம் பார்க்கிறோம். அதற்கான தொடர் ஆய்வுத்திட்டங்கள் வகுக்கப்பட்டுபெரும் நிதி செலவு செய்து நிறைவேற்றப்பட்டு அதன் விளைவுகளைப் பதிவு செய்து புத்தகங்களாக வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு நல்ல அரசியலை, ஆட்சியை, நல்ல நிர்வாகத்தைக் கட்டமைக்கத் தேவையான தலைமைத்துவக் கல்வி சந்தையில் இருக்கிற தலைமைக் கல்விபோல் இருக்கிறதா என்றால், 'ஆம்' என்று கூற முடியாது.
அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் எனக் கல்வித் திட்டங்கள் இருக்கிறதே என்று பலர் எண்ணக்கூடும். இது நம் அரசியல் எது சார்ந்தது, எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும். ஓர் அறம் சார்ந்த அரசியலை எப்படி கட்டமைப்பது என்பதற்கான கல்வி இல்லை.
Denne historien er fra March 29, 2025-utgaven av Dinamani Tiruvannamalai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
கர்நாடக மேலவைத் தேர்தல்: பாஜக, மஜத எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பு
கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏக்கள் 11 பேர் கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தனர். இது, அந்தக் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார்
கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், 4 மணி நேரத்தில் விசாரணையை முடித்து திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.
1 min
June 20, 2026
Dinamani Tiruvannamalai
மேக்கேதாட்டு அணை கூடாது
மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
தியாகத்தின் உருவம் !
உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.
2 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
டெலிகிராம் மீதான தற்காலிக தடை நியாயமானது
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு இடைக்காலத் தடை விதித்தது நியாயமானதே. அளவுக்கு மீறிய நடவடிக்கை அல்ல' என்று தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
June 20, 2026
Dinamani Tiruvannamalai
காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளிக்கக் கூடாது
காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டுவதில் தமிழகத்துக்கு விரோதமாகச் செயல்படும் காங்கிரஸுக்கு அமைச்சரவையில் முதல்வர் ஜோசப் விஜய் இடமளித்திருக்கக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
June 20, 2026
Dinamani Tiruvannamalai
மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.
1 min
June 20, 2026
Dinamani Tiruvannamalai
பேரவை நேரலை தொடரும்: அமைச்சர் ராஜ் மோகன்
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ராஜ்மோகன் தெரிவித்தார்.
1 min
June 19, 2026
Dinamani Tiruvannamalai
ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.
1 min
June 19, 2026
Translate
Change font size

