Prøve GULL - Gratis

காலத்தில் கரைந்துவிட்ட கம்பதாசன்

Dinamani Tirunelveli

|

October 12, 2025

தாஸ் என்றாலும் தாசன் என்றாலும் பொருள் ஒன்றுதான். இலக்கியத்தில் நாம் முதன்முதல் அறியக்கூடிய தாஸ் வடமொழியில் பல காவியங்களை எழுதிய மகாகவி காளிதாஸ். இந்தியில் இராமாயணம் எழுதிய துளசிதாஸ், கன்னடத்தில் புரந்தரதாஸ், ஹிந்தியில் கபீர்தாஸ், என்று பலர் இருந்திருக்கிறார்கள்.

- கவிஞர் முத்துலிங்கம்

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் நாடக உலகின் தந்தையென்று போற்றப்படுகின்ற சங்கரதாஸ், திரைப்படத்துக்கு முதலில் பாடல் எழுதிய மதுர பாஸ்கரதாஸ், பி.யு.சின்னப்பா நடித்த ஆரிய மாலா, ஜெகதலப்பிரதாபன் போன்ற படங்களுக்குக் கதை வசனம் எழுதியவரும், எம்.ஜி.ஆர். நடித்த 'நாடோடி மன்னன்' படத்தில் ‘உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா' என்ற பாடலை எழுதியவருமான கவி லட்சுமண தாஸ் என்று பலர் இருந்திருக்கிறார்கள். ‘கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ வாழ்ந்தாலும் உடலுக்குள்ளே மாரன் உதயமாவது திண்ணம்' என்று அந்தக் கால பூலோக ரம்பை படத்தில் பாடல் எழுதிய புதுக்கம்பன் பூமிபால தாஸ்.

1951-இல் வெளிவந்த சிங்காரி என்ற படத்தில் ‘ஒருசாண் வயிறே இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா?' என்று பாடல் எழுதிய தஞ்சை ராமையா தாஸ், உலகத்தில் எவரும் எழுதாத அளவில் 800 படங்களுக்கு மேல் வசனம் எழுதி கின்னஸ் சாதனை படைத்தவரும், ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதியவரும், தான் வசனம் எழுதிய நூற்றுக்கணக்கான மொழிமாற்றுப் படங்களில் 55 படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் என்னையே எழுத வைத்தவருமான வசன கர்த்தா ஆரூர்தாஸ், ஆகியோரும் இருந்தார்கள்.

பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ், பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ், தொழில் அதிபர் வி.ஜி.பன்னீர்தாஸ், அரசியல் தலைவர்களில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோரும் பிரபலமானவர்கள்.

அதுபோல், தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டவர்களில் பாரதிதாசன், கண்ணதாசன், வாணிதாசன், கம்பதாசன், சுப்புரத்தின தாசன் என்று பெயர் வைத்துக் கொண்ட சுரதா ஆகியோர் புகழ்பெற்றவர்கள். இதில் சுரதா உவமைக் கவிஞர் என்று புகழ் பெற்றவர். அப்படிப்பட்டவரே புதிய உவமைகளில், புதிய சிந்தனைகளில், புதிய கற்பனைகளில் கம்பதாசன் முதலிடத்தில் இருக்கும் சிறப்புக்குரியவர் என்று பாராட்டியிருக்கிறார். அன்றைய காலத்தில் இந்தியா முழுதும் அறிந்த ஒரே தமிழ்க் கவிஞர் கம்பதாசன்தான் என்றும் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் கண்ணதாசன் சகாப்தம் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலை.

கிளியின் சிவந்த மூக்கிற்கு பச்சை மிளகாய்ப் பழத்தை பாரதிதாசன் உவமை சொல்லியிருப்பார். 'வெற்றிலை போடாமலே வாய்சிவந்த பச்சைப் பசுங்கிளிகள்' என்று பாகவதர் நடித்த அமரகவி படத்தில் எழுதியிருப்பார் சுரதா.

FLERE HISTORIER FRA Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tirunelveli

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி

தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tirunelveli

செப்டம்பரில் குறைந்தது சில்லறை பணவீக்கம்

காய்கறிகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருள்கள், பழங்கள், பயறு வகைகள், தானியங்கள், முட்டை, எரிபொருள் போன்றவற்றின் விலை குறைந்ததால், இந்தியாவின் சில்லறை விலை பணவீக்கம் செப்டம்பரில் 1.54 சதவீதமாக சரிந்துள்ளது. இது 2017 ஜூன் மாதத்துக்குப் பிந்தைய மிகக் குறைந்த பணவீக்கம்.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tirunelveli

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.

time to read

2 mins

October 14, 2025

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

நெடுஞ்சாலைகள் இணைப்பில் உலக அளவில் இந்தியா முதலிடம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

time to read

1 min

October 14, 2025

Dinamani Tirunelveli

திருநங்கையருக்கு பாதுகாப்பான வாழ்விடங்கள்: முதல்வர் திறந்துவைத்தார்

'அரண் இல்லம்' எனப்படும் பெயரில் திருநங்கையருக்கு பாதுகாப்பான வாழ்விடங்கள் அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tirunelveli

இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலர்கள் தேர்வு

சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் மாநில துணைச் செயலர்களாக ந.பெரியசாமி, எம். ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tirunelveli

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tirunelveli

மேலும் இரண்டு ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

மேற்கிந்தியத் தீவுகள் ‘:பாலோ ஆன்’

குல்தீப், ஜடேஜா அபாரம்

time to read

1 min

October 13, 2025

Translate

Share

-
+

Change font size