Prøve GULL - Gratis
உரிமைப் போரில் பௌத்த நாடுகள்!
Dinamani Thoothukudi
|August 13, 2025
சர்வதேச நீதிமன்றம் 1962-இல் ‘ப்ரே விஹார்’ கோயிலை கம்போடியாவுக்கு வழங்கினாலும், அதன் சுற்றுப்புறப் பகுதி இன்னும் தாய்லாந்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. எனவே, பக்தர்களின் வருகை குறித்த சிக்கல்கள் தொடர் பதற்றத்துக்கு வழிவகுக்கின்றன.
உலகின் கண்கள் அனைத்தும் காஸா மீது படிந்திருக்க, நூற்றாண்டு கடந்த கம்போடியா-தாய்லாந்து எல்லைப் பிரச்னை திடீரென ராணுவ மோதலாக அண்மையில் வெடித்தது. பொருளாதார விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்திவந்த ஆசியான் அமைப்பை இந்த மோதல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரண்டு பௌத்த நாடுகள் எல்லையில் மாறிமாறி குண்டு மழை பொழிந்ததற்கு, ஒரு மலை உச்சியில் அமைந்துள்ள 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ப்ரே விஹார்’ என்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னம் அந்தஸ்து பெற்ற ஹிந்து கோயிலின் உரிமைப் பிரச்னைதான் முக்கியக் காரணம் என்பது பலரை வியப்பில் ஆழ்த்தும் செய்தி.
மலேசிய பிரதமரின் தலையீட்டில், தாய்லாந்து-கம்போடிய பிரதமர்களுக்கு இடையே நடந்த நேரடிப் பேச்சுவார்த்தையால் நிபந்தனையற்ற சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. முன்னதாக, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை தாய்லாந்து மறுத்திருந்தது. மலேசியாவின் சண்டை நிறுத்தத் திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்ட தாய்லாந்து, பின்னர் தங்கள் ராணுவத்தின் அழுத்தம் காரணமாகவே அதிலிருந்து பின்வாங்கியதாக கம்போடியா குற்றஞ்சாட்டியது. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் கம்போடியா உண்மையாக ஆர்வம் காட்டினால் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் குறிப்பிட்டார். அதன் பிறகே, சமாதானப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமாயின.
இந்த மோதல் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தைக் கூட்டியது. அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளும் மத்தியஸ்தம் செய்ய முன் வந்தன. அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்துக்கு உடன்படவில்லையெனில் வர்த்தக ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் என இரு நாடுகளுக்கும் தன் பாணியில் மிரட்டல் விடுத்தார்.
மேலும், ‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் நான் ஆற்றிய பங்கு எனக்கு நினைவுக்கு வருகிறது’ என்று குறிப்பிட்டு, தமது சமாதானத் தூதர் பாத்திரத்தை நிலைநாட்ட முயன்றார். எனினும், உக்ரைன் மற்றும் காஸா விவகாரங்களில் டிரம்ப் விடுத்த கெடுபிடிகள் தோல்வியைச் சந்தித்த நிலையில், அந்தப் பின்னடைவுகளை ஈடுசெய்யும் நோக்கில் அவர் எடுத்த முயற்சியாகவே இது பார்க்கப்பட்டது.
Denne historien er fra August 13, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.
1 min
January 06, 2026
Dinamani Thoothukudi
ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்
பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
1 min
January 06, 2026
Dinamani Thoothukudi
ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Thoothukudi
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு
முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 06, 2026
Dinamani Thoothukudi
டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்
முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி
1 min
January 06, 2026
Dinamani Thoothukudi
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.
1 mins
January 06, 2026
Dinamani Thoothukudi
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு
தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.
1 min
January 06, 2026
Dinamani Thoothukudi
ஒரு பாதை ரயிலில் தப்பிய தாய், மகள் மறுபாதை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
ஓமலூர் அருகே ரயில் என்ஜின் மோதியதில் தாய், மகள் திங்கள்கிழமை இறந்தனர்.
1 min
January 06, 2026
Dinamani Thoothukudi
திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் கோயில்களில் அமித் ஷா வழிபாடு
திருவானைக்காவல் சம்புகேசுவரர், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்களில் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார்.
1 min
January 06, 2026
Dinamani Thoothukudi
ஜனவரி இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
1 min
January 06, 2026
Translate
Change font size
